Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரயில் தீ விபத்து.. ரயில் சேவை பாதிப்பால் பயணிகள் அவதி.. உதவி எண்களை அறிவித்தது தெற்கு ரயில்வே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவள்ளூர் அருகே டேங்கர் ரயில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பயணிகளுக்காக உதவி எண்களை அறிவித்தது ரயில்வே.

044 2535 4151, 044 2435 4995 ஆகிய எண்களை பயணிகள் தொடர்பு கொள்ளலாம் என தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Southern Railway Announces Helpline Numbers After Tanker Train Fire Disrupts Services Near Tiruvallur

ரயில் தீ விபத்து

திருவள்ளூர் அருகே ஏகாட்டூரில் சென்னை மணலியில் இருந்து எரிபொருள் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சரக்கு ரயில் பெட்டிகள் அடுத்தடுத்து தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிவதால் அப்பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாக காட்சி தருகிறது.

இந்த விபத்து தொடர்பாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்பகுதி முழுவதும் கரும்புகை பாதிப்பால் மக்களுக்கு கடுமையான மூச்சு திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இப்பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரயில்கள் நிறுத்தம்

இந்த தீவிபத்தை தொடர்ந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்ல வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல் அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லக் கூடிய ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகளில் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

மேலும் இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சரக்கு ரயிலில் 3 வேகன்கள் தண்டவாளத்தில் இருந்து விலகியதில் எரிபொருள் கசிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தீ விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. தீயைக் கட்டுக்குள் கொண்டு வர அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் தீயை அணைக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.

உதவி எண்கள் அறிவிப்பு

திருவள்ளூர் அருகே நிகழ்ந்த டேங்கர் ரயில் தீ விபத்தால் யாருக்கும் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. மின் கேபிள் எரிந்ததால் ரயில் சேவையில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் டேங்கர் ரயில் தீ விபத்தால் யாருக்கும் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பயணிகளுக்காக உதவி எண்களை ரயில்வே அறிவித்துள்ளது. 044 2535 4151, 044 2435 4995 ஆகிய எண்களை பயணிகள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவசர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் தீ விபத்து காரணமாக 8 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 5 ரயில்கள் மாற்றுபாதையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 8 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

முழுமையாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள்

20607 சென்னை - மைசூர் (MAS-MYS)
12007 சென்னை - மைசூர் (MAS-MYS)
12675 சென்னை - கோயம்புத்தூர் (MAS-CBE)
12243 சென்னை - கோயம்புத்தூர் (MAS-CBE)
16057 சென்னை - திருப்பதி (MAS-TPTY)
22625 சென்னை - பெங்களூர் (MAS-SBC)
12639 சென்னை - பெங்களூர் (MAS-SBC)
16003 சென்னை - நிஜாமாபாத் (MAS-NSL)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+