தைப்பூசத்தை ஒட்டி மேல்மருவத்தூரில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!
சென்னை: இருமுடி மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக 29 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 1 நிமிடம் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. எந்தெந்த ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் அமைந்துள்ளது. பெண்களுக்கு சிறப்பு உரிமைகளை வழங்கும் கோயிலாக இந்தக் கோயில் உள்ளது. பெரும்பலான கோயில்களில் பெண்கள் கருவறைக்குள் நுழைய முடியாது அல்லது கடும் கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனால் இங்கு பெண்கள் மூலவர் கருவறைக்குள் நேரடியாகச் சென்று வழிபடலாம்.

பெண்கள் தாமே விக்ரகங்களுக்கு பூஜைகள் செய்யலாம். இந்த கோயிலில் தைப்பூசம், யுகாதி, தமிழ் புத்தாண்டு, சித்திரை பௌர்ணமி, ஆடிப்பூரம், நவராத்திரி, பௌர்ணமி, அமாவாசை, மார்ச் 3 அடிகளாரின் பிறந்தநாள் ஆகியவை முக்கிய விழாக்களாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்து வருகிறார்கள். இந்நிலையில், இருமுடி மற்றும் தைப்பூசம் திருவிழாவையொட்டி பல லட்சம் பக்தர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு வருவார்கள். எனவே மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் ரயில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருமுடி மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக 29 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 1 நிமிடம் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஜனவரி 3 ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை லோக்மான்ய திலக் டெர்மினஸ் - காரைக்கால் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (11017), ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிப்ரவரி 02 ஆம் தேதி வரை சென்னை எழும்பூர்- மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12635), ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிப்ரவரி 02 ஆம் தேதி வரை சென்னை எழும்பூர்- மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12637), ஜனவரி 2 ஆம் தேதி முதல் பிப்ரவரி 01ஆம் தேதி வரை கன்னியாகுமரி ஹஸ்ரத் நிஜாமுதீன் செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12641), ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஜனவரி 29-ந்தேதி வரை மதுரை ஹஸ்ரத் நிஜாமுதீன் செல்லும் சம்பார்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலும் (12651) மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.
ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிப்ரவரி 02 ஆம் தேதி வரை சென்னை எழும்பூர் - மன்னார்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (16179), ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிப்ரவரி 02 ஆம் தேதி வரை கன்னியாகுமரி - பனாரஸ் செல்லும் காசி தமிழ் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16367), ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிப்ரவரி 02 ஆம் தேதி வரை சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலும் (16865), டிசம்பர் 31 ஆம் தேதி 2025 முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை ஜோத்பூர் -திருச்சி செல்லும் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (20481). ஜனவரி 6 ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை ராமேசுவரம் - பிரோஸ்பூர் செல்லும் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயிலும் (20497) மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.
ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை செங்கோட்டை சென்னை எழும்பூர் செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலும் (20682), டிசம்பர் 31 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி வரை செங்கோட்டை- தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (20684), ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிப்ரவரி 02 ஆம் தேதி வரை தாம்பரம் -நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலும் (20691), ஜனவரி 2 ஆம் தேதி முதல் பிப்ரவரி 01 ஆம் தேதி வரை புவனேஸ்வர் ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (20849), ஜனவரி 6ஆம் தேதி முதல் பிப்ரவரி 28-ந்தேதி வரை புவனேஸ்வர் புதுச்சேரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (20851) மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 1 நிமிடம் நின்று செல்லும்.
டிசம்பர் 31 ஆம் தேதி முதல் ஜனவரி 30ஆம் தேதி வரை லோகமான்ய திலக் டெர்மினஸ் மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22101), டிசம்பர் 31ஆம் தேதி முதல் ஜனவரி 28ஆம் தேதி வரை புதுச்சேரி - புதுடெல்லி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22403), டிசம்பர் 31ஆம் தேதி முதல் ஜனவரி 28 ஆம் தேதி வரை ராமேசுவரம் -பனாரஸ் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22535), டிசம்பர் 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி 01ஆம் தேதி வரை ராமேஸ்வரம் - அயோத்தி கான்ட் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22613), ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை சென்னை எழும்பூர்- மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22623) மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 1 நிமிடம் நின்று செல்லும்.
ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஜனவரி 29 ஆம் தேதி வரை மதுரை பிகானேர் அனுவ்ரத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22631), ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிப்ரவரி 02 ஆம் தேதி வரை தாம்பரம் நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (22657). ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜனவரி 29 ஆம் தேதி வரை ஜோத்பூர் மன்னார்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (22673), ஜனவரி 1ஆம் தேதி முதல் பிபரவரி 2 ஆம் தேதி வரை சென்னை எழும்பூர் சேலம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (22153), மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 1 நிமிடம் நின்று செல்லும். இவ்வாறாக மொத்தம் 29 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications