திருச்சி, மதுரை செல்லும் ரயில்களின் நேரம் மாற்றம்.. புதிய அட்டவணை வெளியிட்ட ரயில்வே.. நோட் பண்ணுங்க
சென்னை: தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரயில், திருச்சியில் இருந்து ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், திண்டுக்கல் - மதுரை என மொத்தம் 4 ரயில் சேவைகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. எனவே பயணிகள் புதிய அட்டவணைப்படி தங்கள் பயணத் திட்டங்களை மாற்றி அமைத்துக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில்களின் வேகம் அதிகரிப்பு, கூடுதல் ரயில்கள் இயக்கம் என்பது உள்ளிட்ட காரணங்களால் சில ரயில் சேவைகளின் நேரமானது நாளை முதல் மாற்றியமைக்கப்பட உள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரயில்
* திருவனந்தபுரம் சென்டிரலில் இருந்து ராமேசுவரம் செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் - 16343), திருத்தியமைக்கப்பட்ட கால அட்டவணைப்படி, திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு காலை 8.05 மணிக்கு வந்தடையும்.
* இந்த ரயில் மதுரைக்கு 9.20 மணிக்கும், மானாமதுரைக்கு 10.03 மணிக்கும், பரமக்குடிக்கு 10.23 மணிக்கும், ராமநாதபுரத்திற்கு 10.48 மணிக்கும், ராமேசுவரத்திற்கு மதியம் 12.15 மணிக்கும் வந்தடையும்.
திருச்சி - ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரயில்
* திருச்சியில் இருந்து ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் - 16849), திருத்தியமைக்கப்பட்ட கால அட்டவணைப்படி, இனிமேல் திருச்சியில் இருந்து காலை 7.05 மணிக்கு புறப்படும்.
* இந்த ரயில் மானாமதுரைக்கு 9.40 மணிக்கும், பரமக்குடிக்கு 10.08 மணிக்கும், ராமநாதபுரத்திற்கு 10.38 மணிக்கும், உச்சிப்புளிக்கு 10.54 மணிக்கும், மண்டபத்திற்கு 11.09 மணிக்கும், பாம்பனுக்கு 11.19 மணிக்கும், ராமேசுவரத்திற்கு மதியம் 12.35 மணிக்கும் வந்தடையும்.
திண்டுக்கல் - மதுரை ரயில்
* திண்டுக்கல் - மதுரை செல்லும் பயணிகள் ரயில் (வண்டி எண் -56717), புதிய கால அட்டவணைப்படி, இனிமேல் திண்டுக்கல்லில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்படும்.
* தொடர்ந்து அம்பாத்துரைக்கு காலை 8.01 மணிக்கும், கொடைக்கானல் சாலைக்கு 8.10 மணிக்கும், வாடிப்பட்டிக்கு 8.20 மணிக்கும், சோழவந்தானுக்கு 8.29 மணிக்கும், சமயநல்லூருக்கு 8.39 மணிக்கும், கூடல்நகருக்கு 8.49 மணிக்கும், மதுரைக்கு காலை 9.10 மணிக்கும் வந்தடையும்.
ராமேசுவரம் - மதுரை பயணிகள் ரயில்
* இதேபோல் ராமேசுவரம் - மதுரை செல்லும் பயணிகள் ரயில் (வண்டி எண் - 56714), புதிய கால நேர அட்டவணைப்படி ராமேசுவத்தில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்படும்.
* இந்த ரயில் பாம்பனுக்கு 11.43 மணிக்கும், மண்டபத்திற்கு 11.53 மணிக்கும், உச்சிப்புளிக்கு மதியம் 12.10 மணிக்கும், வாலாந்தரவைக்கு 12.20 மணிக்கும், ராமநாதபுரத்திற்கு 12.39 மணிக்கும், சத்திரக்குடிக்கு 12.46 மணிக்கும், பரமக்குடிக்கு 1 மணிக்கும், சூடியூருக்கு 1.13 மணிக்கும், மானாமதுரைக்கு 1.40 மணிக்கும்,
நாளை முதல் புதிய அட்டவணைப்படி இயங்கும்
ராஜகம்பீரத்திற்கு 1.52 மணிக்கும், திருப்பாச்சேத்திக்கு 2.02 மணிக்கும், திருப்புவனத்திற்கு 2.12 மணிக்கும், சிலைமானுக்கு 2.23 மணிக்கும், மதுரை கிழக்கு ரயில் நிலையத்திற்கு 2.35 மணிக்கும், மதுரைக்கு மாலை 3.05 மணிக்கும் வந்தடையும். என்று கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில் பயணிகள் இந்த் அபுதிய அட்டவணைப்படி தங்கள் பயணத் திட்டங்களை மாற்றி அமைத்துக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் நாளை வெள்ளிக்கிழமை முதல் இந்த மாற்றமானது அமலுக்கு வரும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications