திருப்பதி போறீங்களா.. சென்னை ரயில் சேவையில் முக்கிய மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை : சென்னை மற்றும் திருப்பதி இடையே தண்டவாள பராமரிப்பு காரணமாக ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி மற்றும் அதன் மிக அருகே உள்ள மற்ற நகரான ரேணிகுண்டாவும் இரட்டை நகரங்களாக உள்ளன. திருமலை செல்ல திருப்பதி அல்லது ரேணிகுண்டாவில் இறங்கலாம். இதில் ரேணிகுண்டா மெயின் ரயில் வழித்தடம் ஆகும். அதாவது இந்தியாவின் முக்கிய நகரங்களை சென்னை மற்றும் தமிழகத்தை இணைக்கும் வழித்தடத்தில் உள்ளது.

இதன் காரணமாக திருப்பதி மற்றும் ரேணிகுண்டாவிற்கு தினமும் ஏராளமான ரயில்கள் சென்னையில் இருந்து செல்கின்றன. திருப்பதிக்கு ரேணிகுண்டாவை தாண்டித்தான் செல்ல முடியும்.
சென்னையில் இருந்து சதாப்தி எக்ஸ்பிரஸ், குருதாரி எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரயில்கள் உள்பட 4 ரயில்கள் தினசரி இயக்கப்படுகின்றன. ரேணிகுண்டா வழித்தடத்தில் கணக்கே இல்லை. பல வட மாநில ரயில்கள் ரேணிகுண்டா வழியாகவே செல்லும்.
இந்நிலையில் திருப்பதி ரேணிகுண்டா இடையே தண்டவாள பராமரிப்பு காரணமாக ரயில் சேவையில் சில மாற்றங்கள் செயய்ப்பட்டுள்ளன. இதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 2 வரை காலை 6.25 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (16057), ரேணிகுண்டா - திருப்பதி இடையே பகுதி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 2 வரை காலை 10.10 மணிக்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில் (16054) திருப்பதி - ரேணிகுண்டா இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. திருப்பதிக்கு பதிலாகரேணிகுண்டாவில் இருந்து காலை 10.35 மணிக்கு புறப்படும்.
காட்பாடி - திருப்பதி இடையே ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 3 வரை இயக்கப்படும் 3 சிறப்பு பாசஞ்சர் ரயில்களும், ஒரு மெமு ரயிலும் ரத்து செய்யப்பட உள்ளன. இதுதவிர, ஜோலார்பேட்டை - காட்பாடி இடையே ஆகஸ்ட் 30. முதல் செப்டம்பர் 3 வரை இயக்கப்படும் ஒருமெமு விரைவு ரயிலும் ரத்து செய்யப்பட உள்ளது.
சென்னை சென்ட்ரல் - பித்ரகுண்டா இடையே ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 1 வரை இயக்கப்படும் விரைவு ரயில் (17238),பித்ர குண்டா - சென்னை சென்ட்ரல் இடையேயான அதிகாலை 4.45 மணி ரயில் (17237) ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications