ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்.. இன்று சென்னையிலிருந்து பெங்களூருக்கு இயக்கம்! காட்பாடியில் நிற்குமாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று மாலை சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூருக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வந்தே பாரத் எனப்படும் அதிவிரைவு சொகுசு ரயிலை அறிமுகம் செய்தது. தற்போது அது நாடு முழுவதும் உள்ள பல்வேறு முக்கிய ரயில் வழித்தடங்களில் விரிவுபடுத்தப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டில் சென்னை - கோவை, சென்னை - பெங்களூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது.

Southern Railway has announced special Vande Bharat train from Chennai to Bangalore

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, 9 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்தார். அதில் திருநெல்வேலி - மதுரை - சென்னை இடையேயான வந்தே பாரத் விரைவு ரயில் மற்றும் சென்னை - ஆந்திர மாநிலம் விஜயவாடா இடையேயான வந்தே பாரத் ரயிலும் அடக்கம். இந்த நிலையில் இன்று சென்னை புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையத்தில்(சென்னை சென்ட்ரல்) இருந்து இன்று மாலை 5.15 மணிக்கு பெங்களூருக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில் அறிவித்து இருக்கிறது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டு இருக்கும் செய்திக் குறிப்பில், "சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று மாலை 5.15 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் (எண் 06031) காட்பாடிக்கு மாலை 6.48 மணிக்கும் பெங்களூருக்கு இரவு 10 மணிக்கும் சென்றடையும். மறுமாா்க்கமாக பெங்களூரை அடுத்த யஷ்வந்த்பூரிலிருந்து செவ்வாய்க்கிழமை (நவ 21) இரவு 11 மணிக்கு புறப்படும் ரயில் (எண் 06032) காட்பாடிக்கு நள்ளிரவு 2.28 மணிக்கும் சென்னை சென்ட்ரலுக்கு அதிகாலை 4.20 மணிக்கும் வந்தடையும். இதற்கான பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கப்பட்டு உள்ளது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிவிரைவு சொகுசு ரயில் என்று வந்தே பாரத் ரயில் கூறப்பட்டாலும் வழக்கமான எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்திற்கும் இதற்கு பெரிய வித்தியாசம் இல்லை என்றும், அவற்றின் சேவைகளை விட பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாகவும் பயணிகள் தெரிவித்து வருகிறார்ர்கள். பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை எளிய மக்கள் அதிகளவில் வாழும் நாடு இந்தியா. இங்கு, வந்தே பாரத் ரயில் சேவை என்பது உயர் நடுத்தர மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறிய வகுப்பினரால் மட்டுமே எளிதில் பயன்படுத்தும் நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+