திருப்பதி,விஜயவாடா வழித்தடத்தில் செல்லும் 18 ரயில்கள் ரத்து..கவரப்பேட்டை விபத்தால் ரயில்வே அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கும்மிடிப்பூண்டி பிரதான வழித்தடத்தில் கவரப்பேட்டை ரயில் நிலையம் பகுதியில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை தொடர்ந்து இன்று 18 ரயில்களின் சேவையை ரத்து செய்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ், திருப்பதி - புதுச்சேரி ரயில், விஜயவாடா - சென்னை சென்ட்ரல் உள்பட ரத்தான 18 சேவைகளின் விவரங்களை பார்ப்போம்.

கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து சென்னை வழியாக பீகார் மாநிலம் தர்பாங்கா நோக்கிச் செல்லக் கூடிய பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் (12578) நேற்று இரவு சென்னையை கடந்து சென்று கொண்டிருந்தது. இரவு 8.30 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி பாக்மதி எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளானது.

train chennai southern railway

இந்த விபத்தில், 6 பெட்டிகள் தடம் புரண்டதில் 2 ஏசி பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 13 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத்துறையினர் விபத்தில் சிக்கிய பயணிகளை பத்திரமாக மீட்டனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விபத்து நடந்த இடத்தில் ரயில் சீரமைப்புப் பணிகள் விடிய விடிய தீவிரமாக நடந்து வருகிறது. இந்த விபத்து தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் உத்தரவின் பேரில், உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பாக்மதி ரயில் விபத்தைத் தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி உள்பட இரண்டு மெயில்லைன் மார்க்கத்திலும் ரயில்களின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று இயங்கவுள்ள 18 ரயில்களின் சேவைகளை ரத்து செய்தும், சில ரயில்களை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரத்து செய்யப்பட்ட 18 ரயில்களின் விவரம்:

திருப்பதி - புதுச்சேரி MEMU ரயில் (வண்டி எண்.16111)
புதுச்சேரி - திருப்பதி MEMU ரயில் (வண்டி எண்.16112)
சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ் (வண்டி எண். 16203)
திருப்பதி - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.16204)
சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.16053)
திருப்பதி - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.16054)
சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.16057)
திருப்பதி - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.16058)
அரக்கோணம் - புதுச்சேரி MEMU ரயில் (வண்டி எண்.16401
கடப்பா - அரக்கோணம் MEMU ரயில் (வண்டி எண்.16402)
சென்னை சென்ட்ரல் - திருப்பதி MEMU ரயில் (வண்டி எண்.06727)
திருப்பதி - சென்னை சென்ட்ரல் MEMU ரயில் (வண்டி எண்.06728)
அரக்கோணம் - திருப்பதி MEMU ரயில் (வண்டி எண்.06753)
திருப்பதி - அரக்கோண்டம் MEMU ரயில் (வண்டி எண்.06754)
விஜயவாடா - சென்னை சென்ட்ரல் பினாகினி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.12711)
சென்னை சென்ட்ரல் - விஜயவாடா பினாகினி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்.12712)
சூலூர்பேட்டை - நெல்லூர் MEMU ரயில் (வண்டி எண். 06745)
நெல்லூர் - சூலூர்பேட்டை MEMU ரயில் (வண்டி எண். 06746)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+