முக்கியமான 5 ரயில்களின் நேரம் மாற்றம்.. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. நோட் பண்ணுங்க
சென்னை: முக்கியமான 5 ரயில்கள் ரயில் நிலையங்களில் புறப்படும் மற்றும் நின்றும் செல்லும் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: புதுச்சேரியில் இருந்து புதன்கிழமைதோறும் இரவு 11.25 மணிக்கு தாதா் செல்லும் சாலுக்கியா விரைவு ரயில் (எண்: 11006) காட்பாடி நிலையத்துக்கு நள்ளிரவு 1.20 மணிக்கு வந்து 1.40 மணிக்கு புறப்படும். தற்போது, இந்த ரயில் நள்ளிரவு 1.05 மணிக்கு வந்து 1.25 மணிக்குப் புறப்படும்.

அதேபோல, சென்னை எழும்பூரிலிருந்து மாலை 3.40 மணிக்கு புறப்படும் பல்லவன்அதிவிரைவு ரயில் (எண்: 66055) மேல்மருவத்தூா் நிலையத்துக்கு மாலை 5.08 மணிக்கு வந்து, 5.10 மணிக்கு புறப்படும். தற்போது, மாலை 4.05 மணிக்கு வந்து, மாலை 5 மணிக்கு இந்த ரயில் புறப்படும்.
தாம்பரம் - விழுப்புரம் புறநகா் மின்சார பயணிகள் ரயில் (எண்: 66055) செங்கல்பட்டு ரயில் நிலையத்துக்கு மாலை 6.48 மணிக்கு வந்து மாலை 6.50 மணிக்குப் புறப்பட்டுச் செல்வதற்குப் பதிலாக, மாலை 6.58 மணிக்கு வந்து இரவு 7 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.
கொல்லம் - தாம்பரம் விரைவு ரயில் (எண்: 16102) செங்கல்பட்டுக்கு நள்ளிரவு 1.50 மணிக்கு வந்து அதிகாலை 2 மணிக்குப் புறப்பட்டுச் செல்வதற்குப் பதிலாக நள்ளிரவு 1.43 மணிக்கு வந்து, 1.45 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.
மங்களூரு சென்ட்ரல் - தாம்பரம் விரைவு ரயில் (எண்: 16160) செங்கல்பட்டுக்கு அதிகாலை 2.08 மணிக்கு வந்து, 2.10 மணிக்கு புறப்பட்டுச் செல்வதற்கு பதிலாக, நள்ளிரவு 1.53 மணிக்கு வந்து 1.55 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications