தமிழ்நாடு - கேரளா மக்களுக்கு ஒரு சேர வந்த குட் நியூஸ்..ஸ்வீட் அப்டேட் கொடுத்த தெற்கு ரயில்வே
சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்திற்கு தினம் தோறும் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலான முக்கிய அறிவிப்பு ஒன்றை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். மதுரை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய உடனேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிடும்.

ரயில் பயணம்: தட்கலில் டிக்கெட் எடுக்க நினைத்தால் கூட சில நிமிடங்களில் டிக்கெடுகள் அனைத்தும் முடிந்துவிடும். இதனால், தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்பது பயணிகளின் நீண்ட காலை கோரிக்கையாக உள்ளது. பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்தாலும் அதுவும் பயணிகள் கூட்டத்தை போதுமானதாக இல்லை.
சென்னை - கொல்லம் ரயில்: இதனிடையே, தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:- சென்னை எழும்பூரில் இருந்து கேரள மநிலம் கொல்லத்திற்கு தினமும் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை எழும்பூரில் இருந்து மாலை 5 மணிக்கு கிளம்பும் இந்த ரயில், கொல்லத்திற்கு மறுநாள் காலை 7.30 மணிக்கு சென்றடையும். அதேபோல், மறுமார்க்கத்தில் கொல்லத்தில் இருந்து நண்பகல் 12 மணிக்கு கிளம்பும் இந்த ரயில், சென்னைக்கு அதிகாலை 3.05 மணிக்கு வந்து சேரும்.
கூடுதலாக 3 பெட்டிகள்: இந்த ரயிலானது செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, விருதுநகர், மதுரை, செங்கோட்டை, தென்காசி, புனலூர் வழியாக கேரள மாநிலம் கொல்லம் சென்றடையும். இந்த எக்ஸ்பிரஸ் ரயில் 14 பெட்டிகளுடன் இயங்கி வருகிறது. தற்போது ரயில் வழித்தடம் பலப்படுத்தப்பட்டுள்ளதால், புனலூர் - செங்கோட்டை வழித்தடத்தில் 24 பெட்டிகளுடன் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அண்மையில் அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து, இந்த பாதையில் செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது. அண்மையில், எர்ணாகுளம் - வேளாங்கண்ணி ரயிலில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது.
வரும் 9 ஆம் தேதி முதல்: 17 பெட்டிகளுடன் புறப்படும்: தற்போது சென்னை கொல்லம் ரயிலிலும் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்படுகிறது. நாளை மறுநள் முதல் அதாவதும் வரும் 9 ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து புறப்படும் ரயிலிலும், ஏப்ரல் 10 முதல் கொல்லத்தில் இருந்து புறப்படும் ரயிலிலும் கூடுதலாக ஒரு ஏசி மூன்றாம் வகுப்பு,
2 படுக்கை வசதி கொண்ட ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் இணைத்து 17 பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக மூன்று பெட்டிகள் இணைக்கப்படும் என்ற அறிவிப்பு ரயில் பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications