சௌகார் ஜானகி கேட்டது ஒரே ஒரு சான்ஸ்.. எம்ஜிஆர் சொன்ன வார்த்தை.. அடுத்த நிமிடமே நடந்த அதிசயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த மூத்த நடிகை சௌகார் ஜானகி பற்றின நினைவலைகளை ரசிகர்கள் பதிவு செய்து கொண்டேயிருக்கிறார்கள்.. அந்தவகையில் எம்ஜிஆர் ரசிகர்களும், சௌகார் ஜானகியின் பழைய பேட்டி ஒன்றை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.. அதில் சௌகார் ஜானகிக்கு எம்ஜிஆர் செய்த உதவி குறித்து நெகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள்.

ஒருமுறை பேட்டி ஒன்றில் சௌகார் ஜானகி பேசும்போது, "நான் என்னைப் பற்றி எப்போதுமே, நான் ஒரு பெரிய லெஜெண்ட் ஆகணும், அந்த டாப் லிஸ்ட்டில் என் பெயர் இருக்கணும் அப்படியெல்லா நினைத்தது கிடையாது. எனக்கு அதுல எந்த ஆசையும் இல்லை.. ஆனால் தொடர்ந்து பல கிரியேட்டிவான, ரொம்ப அழகான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்று மட்டும் ரொம்பவே ஆசைப்படுவேன்.

Soukar Janaki

நிறைவேறாத ஆசை

ஆனால், ஒரு பெண்ணாக, ஒரு ஃபெமினிஸ்ட்டாக பொதுமக்கள் என்னை எப்படிப் பார்க்கிறார்களோ, அதைவிடவும் ரொம்ப வித்தியாசமான, அழுத்தமான கதாபாத்திரங்களை இயக்குநர்கள் எனக்காக உருவாக்குவார்கள் என்று நான் ரொம்ப எதிர்பார்த்தேன். சொல்லப்போனால், அது நான் எதிர்பார்த்த அளவுக்கு முழுமையா நிறைவேறவில்லை.. இருந்தாலும் அதில் எனக்கு எந்த துக்கமும் இல்லை, இந்தத் துறையில கிடைச்ச அனுபவங்களை வைத்து எனக்கு ஒரு திருப்தி இருக்கு.

இருந்தாலும், நான் வெறும் பாட்டி ரோலிலோ, அல்லது சாதாரண அம்மா கதாபாத்திரங்களில் மட்டும் முடக்கிடக் கூடாதுன்னு நினைக்கிறேன். என்னுடைய முந்தைய சாதனைகள் மற்றும் உழைப்பைக் கருத்தில் கொண்டு, இயக்குநர்கள் எனக்கு இன்னும் கூடுதலான வித்தியாசமான, கேரக்டர்களை வழங்க முன்வரணும்னு கேட்டுக்கொள்கிறேன்.

ஒளிவிளக்கு பட சான்ஸ்

ஒளிவிளக்கு படம் இந்தியில்தான் முதலில் வந்தது.. நான் அப்போது ரொம்ப பிஸியா வேறு படங்களில் நடித்து கொண்டிருந்தேன்.. அப்போதான் ஒளிவிளக்கு தமிழில் எடுக்க முடிவு செய்திருந்தார்கள்.. அந்த படத்துல ஒரு நல்ல கேரக்டர் இருக்குன்னு கேள்விப்பட்டேன். அந்த கேரக்டரை எம்ஜிஆரிடம் பேசி வாங்கிவிடுங்கள் என்று எனக்கு சிலர் சொன்னார்கள்..

ஆனால், சௌகார் படத்துக்கு பிறகு நான் யாரிடமும் சான்ஸ் கேட்டதில்லை.. இருந்தாலும், ஹிந்தியில் மீனாகுமாரி கேரக்டரில் நான் அடிக்க ஆசைப்பட்டு, நேராக ராமாபுரம் தோட்டத்துக்கு போன் பண்ணினேன். ஜானகி அம்மாதான் போன் எடுத்தாங்க.. அண்ணா இல்லையா என்று கேட்டேன்.. உடனே அண்ணா, என்னிடம் பேசினார்..

நான் அவரிடம், ஒளிவிளக்கு படத்துல எனக்கு இந்த ரோல் பண்ண ரொம்ப ஆசையா இருக்கு, அதுல நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க என்று கேட்டேன்.

உடனே வந்த கான்ட்ராக்ட் பேப்பர், கார்

அப்படியா ஜானகி, என்று ஆச்சரியப்பட்ட எம்ஜிஆர், எந்த யோசனையும் பண்ணல.. இதுவரை அந்த கேரக்டரில் நடிக்க வைக்க யாரையுமே முடிவு செய்யல,.. நீங்க கேட்பதில் என்ன தப்பு? நீங்கதான் அந்த ரோலுக்கு ரொம்ப கரெக்ட்டான ஆள், நீங்களே பண்ணுங்க" என்று சொல்லிவிட்டாரு.. அவரே ஓகே சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷம்..

நான் போனை வச்சு கொஞ்ச நேரம்கூட ஆகியிருக்காது, அதுக்குள்ள ஜெமினி ஸ்டுடியோவிலிருந்து என் வீட்டுக்கு கார் வந்துடுச்சு. கூடவே படத்துல நடிக்கிறதுக்கான கான்ட்ராக்ட் பேப்பரோட ஆட்களும் வந்துட்டாங்க. நான் ஒரு போன் கால் பண்ணி கேட்டதுமே, இவ்வளவு விரைவா எனக்கு வாய்ப்பு கிடைச்சதை நினைச்சு நான் இன்னைக்கும் ரொம்ப பெருமைப்படுறேன். எம்.ஜி.ஆரோட அந்த உதவியும், என்கிட்ட காட்டிய அன்பும் என்னால என்னைக்கும் மறக்க முடியாது" என்று சௌகார் ஜானகி பெருமிதத்துடன் கூறியிருந்தார்.

மறைந்த சௌகார் ஜானகி என்றோ ஊடகத்துக்கு அளித்த இந்த பேட்டியைதான் எம்ஜிஆர் ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கி கொண்டிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+