கொரோனா பாடல்... வைரமுத்து எழுதியதை கடைசியாக பாடிய எஸ்.பி பாலசுப்ரமணியம்
கொரோனா தொற்றுக்கு ஆளாகி 50 நாட்கள் சிகிச்சை பெற்றும் பலனின்றி உயிரிழந்த எஸ்.பி பாலசுப்ரமணியம் கடைசியாக பாடியது வைரமுத்து எழுதிய கொரோனா பாடல்தானாம்.
சென்னை: வைரமுத்து எழுதிய கொரோனா விழிப்புணர்வு பாடல்தான் எஸ்.பி பாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் அண்ணாத்தே படத்திற்காகவும் டி.இமான் இசையமைப்பில் பாடியிருக்கிறார் எஸ்.பி பாலசுப்ரமணியம்.
Recommended Video
கொரோனா உலகை நிலைகுலையச் செய்துள்ளது. தொடுதல் வேண்டாம், தனிமையில் இருங்கள், தூய்மையாய் இருங்கள் என எழுதியுள்ளார் வைரமுத்து இந்த பாடல்தான் எஸ்.பி பாலசுப்ரமணியம் பாடிய கடைசி பாடல் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பாடலை பாடி வீடியோ வெளியிட்டுள்ளார் எஸ்.பி பாலசுப்ரமணியம். பாடலின் ஆழமான கருத்தை பாருங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கரோனா கரோனா கரோனா
கரோனா கரோனா கரோனா
அணுவை விடவும் சிறியது
அணுகுண்டை போல் கொடியது
அணுவை விடவும் சிறியது
அணுகுண்டை போல் கொடியது
சத்தமில்லாமல் நுழைவது
யுத்தமில்லாமல் அழிப்பது
கரோனா கரோனா கரோனா
தொடுதல் வேண்டாம்,
தனிமை கொள்வோம்
தூய்மை என்பதை மதமாய் செய்வோம்
கொஞ்சம் அச்சம் நிறைய அறிவு
இரண்டும் கொள்வோம்
இதையும் வெல்வோம்
எத்தனை போர்கள் மனிதன் கண்டான்
அத்தனை போர்களிலும் அவனே வென்றான்
எத்தனை போர்கள் மனிதன் கண்டான்
அத்தனை போர்களிலும் அவனே வென்றான்
கரோனாவையும் கொன்று முடிப்பான்
கொள்ளை நோயை வென்று முடிப்பான்
கரோனாவையும் கொன்று முடிப்பான்
கொள்ளை நோயை வென்று முடிப்பான்
நாளை மீள்வாய் தாயகமே
நாளைய உலகின் நாயகமே
கரோனாவையும் கொன்று முடிப்பான்
கொள்ளை நோயை வென்று முடிப்பான்
இதே போல தெலுங்கிலும் கொரோனா பற்றி எழுதப்பட்டுள்ள விழிப்புணர்பு பாடலையும் பாடியுள்ளார் எஸ்.பி பாலசுப்ரமணியம். இந்த பாடல்களை அழகாக ட்யூன் போட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக வெளியிட்டார் எஸ்.பி பாலசுப்ரமணியம். அவரையே தொட்டுப்பார்த்த கொரோனா விலகி சென்ற பின்னரும் நோயின் பாதிப்பினால் உடல் நலம் பெறாமல் மீளாத்துயரில் ஆழ்த்தி விட்டு சென்று விட்டார். அவரது குரல் இசைக்கானங்கள் உலகமெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications