14 மொழிகளில் ஏஐ தொழில்நுட்பத்தில் வீடியோ.. ‛ஒன் இந்தியா’ வழங்கும் ஸ்பார்க் ஒரிஜினல் யூடியூப் சேனல்
சென்னை: ஒன் இந்தியா சார்பில் Spark Originals என்ற பெயரில் தமிழ், ஹிந்தி,மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்பட10 மாநில மொழிகளிலும், ஆங்கிலம், அரேபிக், ஸ்பானிஷ், பிரெஞ்சு உள்ளிட்ட 4 வெளிநாட்டு மொழிகளிலும் ஏஐ தொழில்நுட்பத்துடன் அசத்தலான வீடியோக்களை உருவாக்கும் வகையில் யூடியூப் சேனல் தொடங்கப்பட உள்ளது.
ஒன் இந்தியா செய்தி நிறுவனம் மொத்தம் 9 இந்திய மொழிகளில் செயல்பட்டு வருகிறது. தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஒடியா, பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒன் இந்தியா சார்பில் செய்திகள் வெளியாகி வருகின்றன. அதேபோல் தனித்தனியாக யூடியூப் சேனல்களும் உள்ளன.

தற்போது ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் வீடியோக்கள் மக்களை கவர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் ஏஐ தொழில்நுட்பத்துடன் வீடியோக்கள் வழங்க தனியாக புதிய யூடியூப் சேனல் என்பது தொடங்கப்படுகிறது.
இந்த புதிய யூடியூப் சேனலின் பெயர் Spark Originals. இது ஒரு AI Driven Proudction Studio ஆகும். இதன் மூலம் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, ஒடியா, பெங்காலி, குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட நம் இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், அரபு, ஸ்பானிஷ், பிரெஞ்சு உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளிலும் ஏஐ வீடியோக்கள் உருவாக்கப்பட உள்ளன.
ஒன் இந்தியாவின் புதிய அறிமுகமாக உள்ள Spark Originals என்பது பி2பி (B2B) மற்றும் பி2சி (B2C)ஆடியன்ஸ்க்கு ஏற்ப ஏஐ சார்பில் வீடியோக்களை வழங்க உள்ளது. Spark Originals-ல் ஏஐ மற்றும் எடிட்டிங் சாப்ட்வேர் பயன்படுத்தப்பட உள்ளது. இது வீடியோ பார்ப்போருக்கு புதுவித அனுபவத்தை வழங்கும். Life Like Characters, Dynamic Animations, Sketch Style Visuals, Detailed environments உள்ளிட்டவற்றை வழங்க உள்ளது. இதன் பின்னணியில் 3 சிறப்புகள் உள்ளன.
முதல் சிறப்பு என்பது AI Powered Story telling. இதன்மூலம் வீடியோ மூலம் மக்களுக்கு எளிதாக புரியும்படி சொல்ல வரும் செய்தியை எடுத்துரைப்பது தான். 2வது சிறப்பு என்பது Scene Prototyping. குறைந்த நேரத்தில் தரமான விஷுவலை வழங்க முடியும். லைட்டிங் மற்றும் காம்போசியன்ஸ்களுக்கான நேரத்தை இது குறைக்கிறது. 3வது சிறப்பு என்பது Full Pre Production Support. ஸ்கிரிப்ட் முதல் திரையில் தோன்றும் காட்சி வரை ஒவ்வொரு படிநிலைகளிலும் அதற்கான வழிக்காட்டுதல்கள் என்பது வழங்கப்படும்.
பி2பி ஃபோக்கஸ்
AI Driven Proudction Studio என்பது திரைப்பட தயாரிப்பாளர்கள், படைப்பாளிகள் மற்றும் விளம்பரதாரரர்களுடன் இணைந்து டீசர், விளம்பரம் உள்ளிட்டவற்றை சார்ந்த முன்மாதிரி வீடியோக்களை உருவாக்க உள்ளது. பொழுதுபோக்கு, நிதி, விளையாட்டு, தொழில்நுட்பம் கல்வி, லைவ் ஸ்டைல் சார்ந்த துறைகளை மையப்படுத்தி இதில் வீடியோக்கள் உருவாக்கப்பட இருக்கிறது. இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலங்கு, கன்னடம், பஞ்சாபி, ஒடியா, பெங்காலி, குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட நம் இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், அரபு, ஸ்பானிஷ், பிரெஞ்சு உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளிலும் ஏஐ வீடியோக்கள் உருவாக்கப்பட உள்ளன. கஸ்டமர்களின் தேவையை Customise முறையில் நிறைவேற்றி தர உள்ளது.
பி2சி ஃபோக்கஸ்
B2C பிரிவு என்பது அனிமேஷன் முதல் Life like Videos வகையை கொண்டாகும். யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பயன்படுத்தும் வீடியோக்கள் இந்த முறையில் உருவாக்கி கொடுக்கப்படும். இந்த பிரிவில் வரும் வீடியோக்கள் மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தவும், ஊக்கப்படுத்தும் வகையிலும் அமைய உள்ளது. கிராமம் முதல் உலகளவில் வசிக்கும் மக்களுக்கு புரியும்படி ஸ்டோரி சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த பாரம்பரிய மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பயன்படுத்தப்பட உள்ளது. அதன்படி லோக்கல் கிரைம், வரலாற்று நிகழ்வுகள், அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகள், சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகள் உள்ளிட்ட டாப்பிக்குகளில் வீடியோக்கள் உருவாக்கப்பட உள்ளது. இதுதவிர நல்ல மெசேஜ் உடன் ஊக்கப்படுத்துவது வகையிலான வீடியோக்களை வழங்க உள்ளது.
தொடர்புக்கு [email protected] என்ற இ-மெயில் முகவரியை அணுகலாம்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications