SPB: பாடும் நிலா மருத்துவமனையில் அனுமதி முதல் சங்கீத மேகத்தில் கரைந்தது வரை.. நடந்தது என்ன?
சென்னை: பாடும் நிலா என அன்பாக அழைக்கப்பட்டு வந்த எஸ்பிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இன்று காற்றுடன் கலந்தது வரை நடந்தது என்ன என்பதை பார்ப்போம்.
பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்திற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு கிட்டதட்ட 35 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இன்று காலமானது வரை முக்கிய நிகழ்வுகளை பார்ப்போம்.

ஆகஸ்ட் 5, 2020: பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தனக்கு மைல்ட் அறிகுறிகளே இருப்பதாகவும், நலமாக இருப்பதாகவும் அவரே வீடியோ மூலம் அறிவித்தார்.
ஆகஸ்ட் 13: எஸ்.பி.பியின் உடல் நிலையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவித்தன.
ஆகஸ்ட் 14: பாலு சீக்கிரம் எழுந்து வா என இளையராஜா உருக்கமாக வீடியோ வெளியிட்டிருந்தார்.
ஆகஸ்ட் 20: எஸ்.பி.பி. உடல் நலம் பெற்று வர வேண்டும் என்று வேண்டி நாடு முழுவதும் பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன. மெழுகுவர்த்தி ஏந்தி பலரும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
செப்டம்பர் 6: மனைவியுடன் மருத்துவமனையில் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடினார் எஸ்பிபி.
செப்டம்பர் 7: எஸ்.பி.பிக்கு கொரோனா குணமடைந்து அவருக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்ததாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்தும் அவர் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வந்தார்.
செப்டம்பர் 24: எஸ்.பி.பி.யின் உடல் நிலை மீண்டும் மோசமடைந்தது. அவர் மிக மிக கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
செப்டம்பர் 25: இன்று காலை முதலே எஸ்பிபியின் உடல் மிகவும் பின்னடைவு ஏற்பட்டு, மாரடைப்பால் அவர் காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த செய்தி திரைத்துறையினர் மட்டுமல்லாமல் ரசிகர்களையும் உலுக்கி எடுத்தது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications