எஸ்பிபியின் "அந்த" கடைசி ஆசை.. இறுதிவரை நிறைவேறாமலேயே காற்றில் கரைந்து விட்ட சோகம்!
எஸ்பிபியின் கடைசி ஆசை நிறைவேறவே இல்லை
சென்னை: உலகமே போற்றும் எஸ்பிபியின் புகழாரத்தை பலரும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.. எல்லாவித பாராட்டையும், வாழ்த்தையும், விருதையும், பெற்ற எஸ்பிபிக்கும் ஒரு ஆசை இருந்துள்ளது.. அந்த கடைசி ஆசையும், கடைசி வரை நிராசையாகவே காற்றில் கரைந்துவிட்டது.
மிகக்குறுகிய காலத்திலேயே சிறந்த பின்னணிப்பாடகராக உருவெடுத்தவர் எஸ்பிபி... ஒரு பாட்டுக்காக பல நாள் ஏங்கி காத்திருந்தவர், ஒரே நாளில் 19 பாடல்களை பாடும் அளவுக்கு பிஸியாகிவிட்டார்.. இது தமிழில் மட்டும்தான்.

ஆனால், அதாவது 6 மணி நேரத்தில் 16 பாடல்களை பாடும் அளவுக்கு ஹிந்தியிலும் பிஸியானவர்.. அதுமட்டுமல்ல, காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 9 மணிக்குள் 21 பாடல்களை பாடும் அளவுக்கு கன்னடத்திலும் பிஸியியானவர். இப்படி தென்னிந்தியாவையே தன் குரலால் கட்டிபோட்டிருந்தார் எஸ்பிபி.
இதைதவிர, வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு.. மொழி தெரியாதவர்கள் கூட, இந்த குரலில் விழுந்து கிடந்தனர்.. அவர்களுக்கான நிகழ்ச்சிகளையும் பல நாடுகளில் நடத்தியவர், சமீப காலமாகவும் அவ்வாறு வெளிநாட்டுக்கும் சென்று வந்தவர்.. இதனால் கடந்த 20 வருஷங்களில் அதிக முறை ஃபிளைட்டில் பயணம் செய்பவர் என்று எஸ்பிபியை சொல்வார்கள்.
ரிக்கார்டிங் இல்லாத சமயத்தில், எல்லாம், அவர் வெளிநாட்டுக்கு உடனே நிகழ்ச்சிக்காக பறந்துவிடுவாராம்.. அவர் போகாத நாடு இல்லை.. உலகமெல்லா பறந்து பறந்து பாடினார்.. ஆனாலும் அவர் போகாத ஒரே நாடு ரஷ்யாதானாம்.. அந்த ஒரு நாட்டுக்கு மட்டும் சென்றுவிட வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
அதற்கான வாய்ப்பும் எப்படியும் வந்துவிடும் என்றும் நம்பிக் கொண்டிருந்தாராம்.. ஆனால் அது நடக்கவே இல்லை.. "எப்படி அந்த கம்யூனிஸ்ட் பூமி விட்டுப் போச்சு?" என அடிக்கடி சொல்லி குறைபட்டுக்கொண்டே இருப்பாராம்.. கடைசிவரை ரஷ்ய மண்ணில் அவர் காலடி படாமல் உயிர் போய்விட்டது.. அவரது ஆசையும் நிறைவேறாமலேயே போய்விட்டது!
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications