உயிரோடு வந்தார் எஸ்பிபி! ஜெயிலர் படத்துக்கு போறீங்களா.. இதை பாருங்க முதல்ல.. ரஜினிக்கே சர்ப்ரைஸ்
சென்னை: ஏஐ எனப்படும் எந்திரன் என்னவேண்டுமானாலும் செய்வான் என்பதற்கு எஸ்பிபியின் இந்த ரத்தமாரே பாடல் சிறந்த உதாரணம்.. எஸ்பிபியே மீண்டும் உயிரோடு வந்து பாடியதுபோல் இந்த பாடல் இருக்கிறது.
ஜெயிலர் திரைப்படம் ரஜினிகாந்த், மோகன் லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா மேனன், தமன்னா, வசந்த் ரவி, நாக பாபு, யோகி பாபு, ஜாபர் சாதிக், கிஷோர், பில்லி முரளி, சுகுந்தன், கராத்தே கார்த்தி, மிதுன், அர்ஷத், மாரிமுத்து , ரித்விக், சரவணன், அறந்தாங்கி நிஷா, மகாநதி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி உள்ளது..

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் நெல்சன் இயக்கி உள்ள ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஜெயிலர் நாளை (ஆக.10) தமிழகம் முழுவதும் வெளியாக உள்ளது. ஜெயிலர் திரைப்படத்தின் பாடல்கள் காவாலா, ஹுக்கும், கலாவணி கண்ணையா, ரத்தமாரே ஆகிய பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. படத்தின் பாடல்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை படத்தின் மீது உருவாக்கி உள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய டாப் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளதும் ஜெயிலர் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு பாடலும் ஒரு ரகம் என்ற வகையில் ரத்தமாரே பாடல் கிட்டத்தட்ட கமலின் விக்ரம் படத்தில் வரும் போர் கண்ட சிங்கம் பாடலை போல் உருக்கமாக அமைத்துள்ளார்கள். சரி அதற்கு மேல் போக வேண்டாம். நாம் சொல்ல வந்த விஷயத்தை மட்டும் சொல்லிவிட்டு போவோம்.
அனிருத் இசையமைக்க விக்னேஷ் சிவன் எழுதிய பாடல் தான் ரத்தமாரே. இந்த பாடலினை விஷால் மிஸ்ரா சிறப்பாக பாடியிருப்பார். சன் டிவி தனது யூடியூப் தளத்தில் நான்கு நாட்களுக்கு முன்பு தான் வெளியிட்டது. மிகவும் மெலடி பாடலான இந்த பாடலினை எஸ்பிபி பாடினால் எப்படி இருக்கும் என்று ஏஐ விரும்பிகள் யோசித்தார்கள். விளைவு அப்படியே எஸ்பிபி வெர்சனை உருவாக்கிவிட்டார்கள். ரத்தமாரே பாடலினை ஏஐ வெர்சனில் கேட்கும் போது, உண்மையில் எஸ்பி பாலசுப்பிரமணியம் உயிரோடு மீண்டும் வந்துவிட்டாரோ என்று தோன்றும். அவ்வளவு சுத்தமாக வடிவமைத்துள்ளார்கள் ஏஐ வடிவமைப்பாளர்கள்.
#Rathmaarey song SPB sir version ❤️❤️ We miss you sir.. now #Jailer is complete (AI) 🙏@sunpictures @anirudhofficial #JailerBookings #Rajinikanth #SuperstarRajinikanth #Thalaivar #JailerFDFS #Jailerreview pic.twitter.com/T92TR5vMIY
— Achilles (@Searching4ligh1) August 9, 2023
ஏஐ ஏற்கனவே தமன்னாவிற்கு பதில் காஜல் அகர்வால், சிம்ரன் உள்பட பலரை தத்ரூபமாக ஆட வைத்து காட்டியது. இதெல்லாம் அவர்களே ரீல்ஸ் போட்டார்களா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்தியது. ஏஐ மூலம் தற்போது எஸ்பிபி உயிர் பெற்றுள்ளார். பாடல்களால் அவர் ஏற்கனவே நம்மோடு வாழ்ந்து வருகிறார். இப்போது ஏஐ மூலம் வாழ போகிறார்.. ரத்தமாரே பாடல் மட்டுமல்ல.. எந்த பாடல் எல்லாம் எஸ்பிபி பாடினால் நன்றாக இருக்கும் என்று மக்கள் விரும்புகிறார்களோ அந்த பாடலை எஸ்பிபி குரலில் கூட இனி கேட்க முடியும்.
இனிவரும் காலங்களில் எந்த குரலும் அழியப்போவது இல்லை. இந்த உயிர் அழிந்தாலும், அதனை தத்ரூபமாக ஏஐ மூலம் கொண்டுவந்துவிட முடியும். நாம் காண விரும்பும், காண வேண்டியர்களையும் ஏஐ நம் கண் முன்னே நிச்சயம் நிறுத்தும்.
அதேநேரம் பெரும் சிக்கலையும் ஏஐ ஏற்படுத்த போகிறது, தத்ரூபமாக பல மார்ப்பிங்ஐ இந்த ஏஐ மூலம் செய்ய முடியும் என்பதால்.. யாரை பற்றியும் எப்படிப்பட்ட வீடியோவையும் ஏஐ இல் உருவாக்கி உலாவ விட முடியும். ஒரிஜினலை விட ஏஐ தத்ரூபமாக இருக்கும் என்கிற அளவிற்கு வளர்ந்து வருகிறது. எனவே ஏஐ கண்டுபிடித்தவர்கள், ஏற்படுத்த போகும் குழப்பத்திற்கும் தீர்வை கண்டுபிடிக்க வேண்டும்.. இல்லாவிட்டால், மனிதன் எந்திரனோடு சண்டை போடும் நிலைக்கு காலம் தள்ளிவிடும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications