எம்எல்ஏக்களுக்கு "டிரெயினிங்".. அப்பாவுக்கு "ஓகே" சொன்ன ஸ்டாலின்.. பட்ஜெட்டில் செம சிறப்பு!

பட்ஜெட் கூட்டம் குறித்து முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார் சபாநாயகர் அப்பாவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபையில் காகிதம் இல்லாத மின்னணு பட்ஜெட்டை தாக்கல் செய்வது பற்றி ஆலோசனை நடைபெற்று வருகிறது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

இந்த முறை திமுக அரசின் பட்ஜெட் தாக்கலாகிறது.. எந்த மாதிரியான அறிவிப்பை உள்ளடக்கி பட்ஜெட் இருக்குமோ என்ற எதிர்பார்ப்பும் எகிறி வருகிறது.

அந்த வகையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கவனத்தை பெற்று வருகிறார்.. பட்ஜெட் குறித்து எத்தனையோ யூகங்கள் வெளிவந்த நிலையில் பிடிஆரே ஒரு ட்வீட் போட்டிருந்தார்.

முதலமைச்சர்

முதலமைச்சர்

அதில், "வெளிவரவுள்ள தமிழ்நாடு பட்ஜெட் பிடிஆர் பட்ஜெட் என்ற கூற்று தவறு, எல்லாம் முதலமைச்சர் பட்ஜெட்தான்.. முதல்வர் ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வையுடன் உருவாகிறது. எனவே PTR பட்ஜெட் என்ற கூற்று தவறு, எல்லாம் முதலமைச்சர் பட்ஜெட்தான். ஆனால் இம்முறை வழக்கத்திற்கு மாறாக IAS அதிகாரிகள் எழுதி தரும் பட்ஜெட்டுக்கு மாற்றாக ஒரு அரசியல்வாதி எழுதியதாக இருக்கும்" என்று உறுதிபட தெரிவித்திருந்தார்.

அப்பாவு

அப்பாவு

இந்நிலையில், இந்த முறை நடக்க போகும் பட்ஜெட் குறித்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் முக்கிய தகவல் ஒன்றை கூறினார்.. அவர் சொல்லும்போது, "தமிழக சட்டசபையில் காகிதம் இல்லாத மின்னணு பட்ஜெட்டை தாக்கல் செய்வது பற்றி ஆலோசனை நடைபெற்று வருகிறது. அது தொடர்பான ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

பயிற்சி

பயிற்சி

கால மாற்றத்துக்கு ஏற்ப காகிதம் இல்லாத இதுபோன்ற மின்னணு பட்ஜெட்டை கொண்டுவர வேண்டும் என்று பெரும்பாலான உறுப்பினர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக முதலமைச்சருடன் கலந்து ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. அப்போது அவர், எம்எல்ஏ க்கள் அனைவரும் மின்னணு பட்ஜெட் பற்றி நன்றாக தெரிந்து கொள்ளும் வகையில் பயிற்சி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆதரவு

ஆதரவு

இதன்படி அனைத்து உறுப்பினர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எல்லாருக்கும் விசைப்பலகை இணைப்புடனான கையடக்க கணினி கொடுக்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது.. நவீன தொழில் நுட்பத்துக்கு ஏற்ப சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.. பெரும்பான்மையான உறுப்பினர்களும் இதற்கு ஆதரவு கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஜெய்ஹிந்த்

ஜெய்ஹிந்த்

படிப்படியாக தான் இந்த இ - பட்ஜெட் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.. கடைசி உறுப்பினர் கற்று கொள்ளும் வரையிலும் இரண்டு நடைமுறைகளும் தொடரும்" என்றார். இதையடுத்து, ஜெய்ஹிந்து விவகாரம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, அது தொடர்பாக பொதுவெளியில் விவாதிக்க முடியாது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+