உணவு இடைவேளை எல்லாம் ஸ்கூல்ல தான் விடுவாங்க! இங்க அது மாதிரி கிடையாது! சபாநாயகர் அப்பாவு!
சென்னை: உணவு இடைவேளை எல்லாம் பள்ளியில் தான் விடுவார்களே தவிர அது போல சட்டசபை கூட்டத் தொடரின் போது விட முடியாது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
வயது முதிர்ந்த எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் இருக்கிறார்களே என நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்றும் வயது முதிர்ந்ததாக நீங்களாகவே கருதிக்கொள்ள வேண்டாம் எனவும் கூறினார்.
சபாநாயகர் அப்பாவுவின் இந்தப் பேச்சால் செய்தியாளர்கள் சந்திப்பின் போது சிரிப்பலை எழுந்தது.

அலுவல் ஆய்வுக் கூட்டம்
தமிழக சட்டசபை ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெறும் என அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அப்போது அவரை சூழ்ந்த செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய அவர், சட்டசபை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே நடைபெறும் என்றும் கடந்த முறை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதை போல் இந்த முறையும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் எனக் கூறினார்.

நேரடி ஒளிபரப்பு
மேலும் சட்டமன்றக் கூட்டத்தை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறிய அவர் 19 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துவிட்டாரா என்பதை நிருபர்கள் தான் அவரிடம் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இட நெருக்கடியை கருத்தில் கொண்டு புதிய சட்டமன்றத்துக்கு மாறுவது தொடர்பாக அமைச்சரவை தான் முடிவெடுக்க வேண்டுமே தவிர நீங்களும், நானும் அல்ல என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

உணவு இடைவேளை
அதேபோல், உணவு இடைவேளை எல்லாம் பள்ளியில் தான் விடுவார்களே தவிர அது போல சட்டசபை கூட்டத் தொடரின் போது விட முடியாது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். வயது முதிர்ந்த எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் இருக்கிறார்களே என நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்றும் வயது முதிர்ந்ததாக நீங்களாகவே கருதிக்கொள்ள வேண்டாம் எனவும் கூறினார்.

சிரிப்பலை
செய்தியாளர்கள் எழுப்பிய கடினமான கேள்விகளுக்கு கூட தனக்கே உரிய பாணியில் டைமிங்காக பேசி பேட்டியளித்த இடத்தையே கலகலப்பாக்கினார். முன்னதாக அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன், அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications