போதுமா.. புள்ளி, கமா மாறாமல் தான் திருப்பி அனுப்புவோம்! ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு தந்த பதிலடி
சென்னை: ஆளுநர் ஆர்என் ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் இன்றைய சட்டசபை சிறப்பு கூட்டத்தில் மீண்டும் தீர்மானமாக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் புள்ளி, ஹமா கூட மாற்றாமல் தான் ஆளுநர் ஆர்என் ரவிக்கு திருப்பி அனுப்புவோம் என சபாநாயகர் அப்பாவு அதிரடியாக கூறினார்.
தமிழக ஆளுநர் ஆர்என் ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற இன்று சட்டசபை சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. காலை 10 மணிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமையில் இந்த கூட்டம் தொடங்கியது.

முதலில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதன்பிறகு ஆளுநர் ஆர்என் ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்கான தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் வாசித்தார்.
அதன்பிறகு தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. முதல் ஆளாக தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் பேசினார். அப்போது அவர் 10 மசோதாக்களையும் திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்என் ரவிக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்தார். மேலும் அவர் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
அதோடு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் நிறைவேற்றும் வகையில் கொண்டு வந்துள்ள 10 மசோதாக்களுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தார். அதன்பிறகு அந்த 10 மசோதாக்களையும் அவர் ஒவ்வொன்றாக படித்தார். இந்த வேளையில் சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டார். இந்த மசோதாக்களை தனித்தனியாக கூற வேண்டும். முதல்வர் கொண்டு வந்த மசோதாக்களுக்கு என ஒற்றை வார்த்தையில் முடித்து விடுங்கள் என்றார்.
அதை கேட்ட பிறகும் கூட தொடர்ந்து வேல் முருகன் பேசி கொண்டே இருந்தார். இதையடுத்து மீண்டும் குறுக்கிட்ட சபாநாயகர் போதுமா.. என கேட்டார். அதற்கு அவர், ‛‛நான் இன்னும் பேசவே இல்லையே தலைவரே'' எனக்கூற அவையில் சிரிப்பலை எழுந்தது. இதையடுத்து சபாநாயகர் அப்பாவு, ‛‛முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த மசோதா பற்றி கருத்து மட்டும் சொல்லுங்கள். ஏனென்றால் புல்ஸ்டாப், கமா மாற்றாமல் தான் மீண்டும் அனுப்ப உள்ளோம்'' என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications