எனக்கிருந்த Low BP-யை திமுக எம்எல்ஏக்களே சரியாக்கிவிட்டார்கள்! அவையில் சபாநாயகர் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எனக்கிருந்த குறைந்த ரத்த அழுத்தம், மருத்துவ சிகிச்சையே இல்லாமல் திமுகவினரின் செயல்பாடுகளால் சரியாகிவிட்டது என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் நேற்றைய தினம் முதல்வர் விஜய் பதிலுரையில், சர்காரியா கமிஷன் குறித்தும் அமலாக்கத் துறை புகார் குறித்தும் தெரிவித்திருந்தார். அதில் மறைந்த கருணாநிதி, மாறன் குறித்தெல்லாம் ஊழல் செய்ததாக பேசியிருந்தார்.

tamil nadu assembly jcd prabhakar

முதல்வர் பேச்சுக்கு அவையிலேயே திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். பேச அனுமதிக்கக் கோரி திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். எனினும் திமுகவினருக்கு பேசுவதற்கு சபாநாயகர் வாய்ப்பு கொடுக்கவில்லை. இதையடுத்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் தமிழக சட்டசபை கூடியதும் திமுக கொறடா எ.வ.வேலு பேசுகையில், டெல்லியில் மாறனுக்கு அஞ்சல் தலை வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொண்டார். அது போல் மாறன் குடும்பத்தினரின் படங்களில் நடித்து அவர்களிடம் சம்பளம் வாங்கியிருந்தார்.

அப்படிப்பட்டவர் மாறன் குடும்பத்தினர் குறித்து பேசலாமா? அது போல் சர்காரியா கமிஷன் விசாரணையில் நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இல்லை இல்லை என கூறிவிட்டார்கள். அப்படியிருந்தும் ஒரு முதல்வரே இது போன்ற அமலாக்கத் துறை குற்றச்சாட்டுகளை அவையில் படிப்பது என்ன நியாயம் என கேட்டதுடன், விஜய் பேசிய சர்காரியா கமிஷன், மாறன் குறித்த விஷயங்களை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.

ஆனால் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரோ, முதல்வர் விஜய் பேசுவதற்கு முன்பு என்னிடம் ஆதாரங்களை காட்டிவிட்டுதான் பேசினார். அவர் பேசியவை எல்லாம் ஏற்கெனவே இந்த அவையில் பேசப்பட்டவை என்பதால் அவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்றார்.

இதற்கு திமுகவினர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் சபாநாயகர் இருக்கையை சூழ்ந்து கொண்டு அவர்கள் கோஷமிட்டனர். அவர்களை அமைதியாக இருக்கையில் அமருங்கள் என சபாநாயகர் சொல்லியும் கேட்கவில்லை.

இதையடுத்து சபாநாயகர் இருக்கையை நோக்கி வசந்தம் கார்த்திகேயன் ஓடி வந்தார். அப்போது கெட் அவுட் என கூறி அவரை சபாநாயகர் விரட்டினார். இதையடுத்து சபாநாயகர் , எ.வ.வேலு அல்லது கே.என்.நேரு ஆகியோரில் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிப்பதாக தெரிவித்தார்.

அவர்களில் ஒருவர் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசட்டும் என்றார். ஆனாலும் திமுகவினர் அவர்களது இருக்கைச் செல்லவில்லை. அப்போது குறுக்கிட்ட அவை முன்னவர் அமைச்சர் செங்கோட்டையன், திமுகவினர் அவை மாண்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என சொல்லிக் கொண்டிருந்தார்.

இதையடுத்து நிறைய முறை சபாநாயகர் சொல்லியும் திமுகவினர் கேட்காத நிலையில் அவைக் காவலர்களை அழைத்தார். இதையடுத்து அனைத்து திமுகவினரையும் நாலாபுறங்களில் இருந்து வந்த அவைக் காவலர்கள் திமுக எம்எல்ஏக்களை குண்டுக்கட்டாக தூக்கி கொண்டு வெளியேற்றினர். அப்போது அவர்கள் கோஷமிட்டபடியே சென்றனர். அதற்கு சபாநாயகர், அவர்களை அமைதியாக வெளியேற்றுங்கள் என்றார்.

இதையடுத்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேசுகையில், எனக்கு ஞாயிற்றுக்கிழமை உடல்நிலை சரியில்லை. எனக்கு குறைந்த ரத்தம் அழுத்தம் ஆகிவிட்டது. எனவே மருத்துவர்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியிருந்தனர். எனினும் முதல்வரின் பதிலுரையை கேட்பதற்காகவே நான் நேற்று அவைக்கு வந்திருந்தேன். ஆனால் திமுகவினரின் செயல்களால் மருத்துவ சிகிச்சை இல்லாமல் எனக்கு குறைந்த ரத்த அழுத்தம் சரியாகிவிட்டது.

எ.வ.வேலுவை பேச விட்டது எனது தவறா, அவர் என்ன பேச போகிறார் என எனக்கு தெரியாது, மென்ஷன் செய்ய வேண்டும் என்றார். அவரை அனுமதித்தேன். நேற்று போல் அவைக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் திமுகவினர் இன்றும் ஈடுபட்டுள்ளனர். அவர்களை அதனால்தான் வெளியேற்றினேன். அவை மாண்புதான் எனக்கு முக்கியம். இவ்வாறு சபாநாயகர் விளக்கமளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+