சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆரம்பமே "அசத்தல்".. ஸ்டாலின் அரங்கில் நுழைந்ததுமே.. காத்திருந்த இன்ப அதிர்ச்சி.. தெறித்த கலாச்சாரம்

மாமல்லபுரத்தில் பாரம்பரியம், கலாச்சாரம் மிளிரும்படி நிகழ்ச்சிகள் நடந்தன

Google Oneindia Tamil News

சென்னை: மாமல்லபுரத்தில் தமிழகத்தின் பாரம்பரியமும், கலாச்சாரமும், பண்பாட்டு நெறிகளும் பிறநாட்டு மக்களை அசரடித்துவிட்டன..

Recommended Video

    Chess Olympiad 2022: Keezhadi-யிலும் சதுரங்கம் - CM Stalin

    44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான துவக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    இதில் முக்கியமாக அனைவரையும் ஈர்த்துள்ளது, தமிழ்நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை உலக மக்கள் அனைவரும் அறியும் வகையில் செய்திருப்பதுதான்.

    துவக்கத்திலேயே பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் அமர்க்களமாக துவங்கியது.. பிறகு, வீடியோ காட்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டது.

     "லிடியன்" மேஜிக் செய்துவிட்டார்.. வியந்து பார்த்து வெளிநாட்டினர்! சிலிர்த்த ரஜினி! சுவாரசிய சம்பவம்!

    தெறிக்கும் பாரம்பரியம்

    தெறிக்கும் பாரம்பரியம்

    இதில், சங்க காலம் தொடங்கி தற்போது வரை சேர சோழ பாண்டிய மன்னர்கள் வரலாறு, திருக்குறள், சிலப்பதிகாரம் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டலான ஜல்லிக்கட்டு சிலம்பம், தமிழர்களின் கட்டிடக்கலையை விளக்குகின்ற வகையில் தஞ்சை பெரிய கோவில் மாமல்லபுரம் கடற்கரை கோவில், திருவள்ளுவர் பாரதியார் பாரதிதாசன் என கலை இலக்கிய சான்றோர்கள், தமிழகத்தை வரலாறுகளையும் பெருமைகளையும் பறைசாற்றுகின்ற வகையில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

    சிலிர்த்து போனார்கள்

    சிலிர்த்து போனார்கள்

    யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற டயலாக்குடன் வீடியோ முடிந்தது.. கிட்டத்தட்ட 10 நிமிட வீடியோவை பார்த்து முடித்துமே, அரங்கத்தில் இருந்த அனைவரும் சிலிர்த்து போய்விட்டன.. செஸ் ஒலிம்பியாட் போட்டி... கரகாட்டம், பொய்க்கால் குதிரை என அடுத்தடுத்த நிகழ்வுகள் பாரம்பரியங்கள் ஓங்கி ஒலித்தன.. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பட்டு வேஷ்டி சட்டை அணிந்து கலந்து கொண்டார்.. மஞ்சள் கலரில் பட்டுசட்டை அணிந்திருந்தார்.

    ஸ்டாலின்

    ஸ்டாலின்

    ஸ்டாலின் சும்மாவே யூத்புல்லாக இருப்பார்.. இன்று இந்த பளபள டிரஸ்ஸில் கெத்தாக மேடையில் உட்கார்ந்துள்ளதை பார்த்து, இளைஞர்களின் காதில் புகைச்சலே வந்துவிட்டது.. இந்த விழாவுக்கு வருகை தந்த இந்திய அணியினரும், வேட்டி சேலையில் ஜொலிக்க வந்தனர்.. பெண்கள், வெள்ளை மற்றும் பிங்க் நிறத்தில் சேலை அணிந்து வர, அனைத்து வீரர்களையும் முதல்வர் ஸ்டாலின் கைதட்டி உற்சாகமூட்டி வரவேற்றார்.. அங்கிருந்த விழா பெண்களும், தலையில் மல்லிகைப்பூ, புடவையில் அசத்தினர்..

     மணற் சிற்பம்

    மணற் சிற்பம்

    ஸ்டாலின் உள்ளே நுழைந்ததுமே,சிற்பி சர்வம் படேல் கடகடவென மணல் சிற்பத்தை வரைந்து, முதல்வருக்கே இன்ப அதிர்ச்சி தந்தார்.. இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் பியானோ வாசித்து திளைக்க செய்தார்.. அதிலும் கண்களைக் கட்டிக்கொண்டு, ஒரே நேரத்தில் 2 பியானோக்களை வாசித்தை பார்த்து அரங்கமே அதிர்ந்தது.. விழா களைகட்டிக் கொண்டிருக்க, லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ள நம் பிரதமர், சிரித்தபடியே கையெடுத்து கும்பிட்டு என்ட்ரி தர, விழா ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது.

    English summary
    special and innovative present for cm mk stalin and patel sand painting chess மாமல்லபுரத்தில் பாரம்பரியம், கலாச்சாரம் மிளிரும்படி நிகழ்ச்சிகள் நடந்தன
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X