"சர்ப்ரைஸ்" தந்த பன்னீர்செல்வம்.. நெகிழ்ந்து போன விவசாயிகள்.. கவனத்தை ஈர்த்த வேளாண் பட்ஜெட்
அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் சோதனை சாலைகள் அமைக்கப்படும் என்றார்
சென்னை: விளைபொருட்களில் ரசாயனங்களை கண்டறிய சோதனை சாலைகள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளதுடன், மிக முக்கியமான நம்பிக்கையையும் விவசாயிகளுக்கு அமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி தந்துள்ளார்.
Recommended Video
தமிழக வேளாண் பட்ஜெட்டை சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்து, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
விவசாய கூலித் தொழிலாளர்களை ஒருங்கிணைக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் பிடிஆர்! என்னென்ன திட்டங்கள், அறிவிப்புகள்? முழு விபரம்! .

ஆடு, மாடு
அவரது உரையில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகள் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட வேளாண் சார்ந்த தொழில்களை ஊக்கப்படுத்த 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சர்க்கரை ஆலைகளில் உள்ள ஆய்வுக்கூடங்கள் நவீனமயமாக்கப்படும். வேளாண்துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு இனி சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படும். தஞ்சை,சேலம்,திருவள்ளூர் நெல்லை ஆகிய மாவட்டங்களில் சோயா பீன்ஸ் சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை.

கூலி தொழிலாளர்கள்
ரூ.300 கோடியில் கிராமங்களில் வீடுகளுக்கு இலவச தென்னங்கன்று வழங்கும் திட்டம்.. விவசாய கூலித் தொழிலாளர்களை வட்ட, மாவட்ட அளவில் ஒருங்கிணைக்க புதிய திட்டம் தொடங்கப்படும். 9.26 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடாக 2,055 கோடி வழங்கப்பட்டுள்ளது.. தூத்துக்குடி, விருதுநகர் தென்காசி, கரூர், அரியலூர் மாவட்டங்களில் கடலை, சூரியகாந்தி, ஆமணக்கு பயிரிடலை அதிகரிக்க ₹28.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது போன்றவைகள் இடம்பெற்றுள்ளன.

விதைகள்
எனினும் அனைவரையும் கவர்ந்ததாக இன்னொரு அறிவிப்பு உள்ளது.. அதுதான் டிஜிட்டல் முறையாகும்.. மாறி வரும் நவீன உலகில், விவசாயம் சார்ந்த விஷயங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் தொழில் நுட்பத்தையும் கையில் எடுத்துள்ளது திமுக அரசு.. இன்றைய தினம் அமைச்சரின் அறிவிப்பில் அதை நன்கு பார்க்கவும் முடிந்தது.. பன்னீர்செல்வம் உரையில், உற்பத்தி முதல் விற்பனை வரை சேவைகளை, விதை முதல் விளைச்சல் வரை தொழில்நுட்பங்களை முழுமையாக மின்னணு முறையில் விவசாயிகள் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார்.

ஆன்லைன்
அதுமட்டுமல்ல, இடுபொருள், விதைகளை ஆன்லைனில் பதிவு செய்து விற்பனை செய்யப்படும் என்றும், மாலை நேரத்திலும் உழவர் சந்தைகள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு, உழவர் சந்தைகளில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் அமைச்சர் உறுதி தந்துள்ளார். விளைபொருட்களில் ரசாயனங்களை கண்டறிய சோதனை சாலைகள் அமைக்கப்படும்.. ரூ.30 கோடியில் அங்கக வேளாண்மை இயக்கம் செயல்படுத்தப்படும்..

நாலடியார்
மாவட்டத்துக்கு 50 ஹெக்டேர் நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கக வேளாண்மை இயக்கம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அங்கக வேளாண்மை இயக்கம் மூலம் விளைபொருட்களில் ரசாயனங்களை கண்டறிய சோதனை சாலைகள் அமைக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, நாலடியாரை மேற்கோள் காட்டி அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் வேளாண் இந்த பட்ஜெட் உரையை வாசித்தது அனைவரையும் சிலிர்க்க வைத்துவிட்டது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications