Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் பிடிஆர்! என்னென்ன திட்டங்கள், அறிவிப்புகள்? முழு விபரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்யும் முதல் முழு பட்ஜெட் இதுவாகும்.

Recommended Video

    TN Budget 2022- 2023: தாக்கல் செய்தார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

    கடந்த வருடம் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்தது. இதையடுத்து இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் கடந்த வருடம் ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்தார். இந்த நிலையில் இந்த நிதி ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் இன்று தாக்கல் செய்தார்.

    கடந்த ஆண்டு பட்ஜெட் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இன்று பட்ஜெட் ஜார்ஜ் கோட்டையில் தாக்கல் செய்யப்பட்டது . இந்த முறையும் பேப்பர் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

     பட்ஜெட்

    பட்ஜெட்

    இதையடுத்து அனைத்து சட்டசபை உறுப்பினர்களின் இருக்கைகளுக்கு முன்பும் கணினி பொருத்தப்பட்டது. இந்த பட்ஜெட்டில் சமூக நீதி, பெண் கல்வி, கல்வித்துறை, நீர் வள மேம்பாடு, இயற்கை வள, முதலீடுகள் தொடர்பான பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றன. ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 4281.76 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். இருளர்களுக்கு மொத்தமாக 1443 வீடுகள் கட்டித்தரப்படும் என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதற்கு மொத்தமாக 70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாமிரபரணி படுகையில் கண்டறியப்பட்ட தொல்பொருட்கள் 3,200 ஆண்டுகள் பழமையானதாகும்.தாமிரபரணி ஆற்றுப் படுகை தொல்பொருட்கள் மூலம், தமிழர் தம் வரலாறு மீண்டும் உறுதியாகியுள்ளது.தமிழ்நாட்டில் 7 இடங்களில் அகழாய்வு, 2 இடங்களில் தல ஆய்வு செய்யப்படும்.

    கல்வித்துறை

    கல்வித்துறை

    அரசு பள்ளியில் 6 - 12 வரை படித்து உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை தரப்படும். மாதாமாதம் வங்கி நேராக இந்த பணம் செலுத்தப்படும். மாணவிகள் உயர் கல்வி படிப்பதை ஊக்குவிக்கும் விதமாக இந்த நிதி அளிக்கப்படும். திருமண உதவித்தொகை திட்டம் கல்வி உதவித் தொகை திட்டமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவித்தொகை திட்டம் உயர்கல்வி உதவித்திட்டமாக மாற்றப்பட்டது.

    உயர்கல்வித் துறைக்கு ரூ.5,568 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறைக்கு ரூ.36,785 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இல்லம் தேடி கல்வித்திட்டத்திற்கு ரூ. 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவத் துறைக்கு ரூ.17,901 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு புதிய தலைமை மருத்துவமனைகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 19 மாவட்டங்களில் புதிய தலைமை மருத்துவமனைகள் உருவாக்கப்படும். இதற்கு ரூ.1,019 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

     சென்னை அறிவிப்புகள்

    சென்னை அறிவிப்புகள்

    சென்னையில் வருடா வருடம் ஏற்படும் வெள்ளத்தை தடுக்க இந்த முறை முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி சென்னையில் வெள்ளத்தை தடுக்கும் பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள அணைகளை புனரமைக்க 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 64 பெரிய அணைகளை புனரமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதோடு நீர் வள பயன்பாட்டை சரி செய்ய ரூ.3384 கோடி மூலம் பாசன அமைப்பு ஏற்படுத்தப்படும். சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ₹500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் தெரிவித்தார். கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு ₹1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. லண்டனை சேர்ந்த கீ கார்ட்னஸ் அமைப்புடன் சேர்ந்து தாவரவியல் பூங்கா அமைக்கப்படும். சென்னை அருகே 300 கோடி செலவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும். மதுரவாயல் - துறைமுகம் உயர்மட்ட சாலையை மீட்டெடுத்து நிறைவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது; 20 கிமீ தொலைவு ஈரடுக்கு உயர்மட்ட சாலையாக அமையவுள்ளது. மீஞ்சூர் முதல் வண்டலூர் வரை 62 கிலோமீட்டர் தூரத்துக்கு இரு புறங்களிலும் பெருவழி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.

    வழிபாடு

    வழிபாடு

    கோயில்களை போல தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்காக்களை பழுது பார்க்கவும் புனரமைப்பதற்காகவும் இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து உள்ளார். கோயில்களை பொறுத்தவரை 1000 ஆண்டுகளுக்கு பழமையான ஆலயங்களை புனரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், இந்து சமய அறநிலையத்துறைக்கு மட்டும் ரூ.340.87 கோடி ஒதுக்கப்படுவதாகவும் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவித்து உள்ளார்.

    மாநகரம்

    மாநகரம்

    கோவையில் கைத்தொழில் மேம்பாட்டு குழுமம் அமைக்க ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கோவை, வேலூர், பெரம்பலூரில் புதிய தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். மாநகர பேருந்துகளில் மகளிர் இலவச பேருந்து பயணம் மேற்கொள்ள ரூ.1520 மானியம் அளிக்கப்படும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு. நகர்புற வளர்ச்சித்துறைக்கு ரூ.8737 கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு. பிரதமரின் வீடு வசதித்திட்டத்திற்கு ரூ. 3700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. காஞ்சிபுரத்தில் அரசு அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை, உயர்தர மருத்துவமனையாக மேம்படுத்தப்படும். செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் ரூ.25 கோடியில் சமூக மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்.

    தமிழ்

    தமிழ்

    தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 5 கோடி ரூபாய் செலவில் 21 மொழிகளில் அச்சிடப்படும். அவரின் கருத்துக்கள் பிற மொழிகளில் புத்தகமாகவும் டிஜிட்டல் வடிவிலும் கொண்டு செல்லப்படும். தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.82.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கொற்கையில் 5 கோடி ரூபாயில் ஆழ்கடல் ஆய்வு மேற்கொள்ளப்படும். புதிய நூலகங்கள் அமைக்க 125 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இலக்கிய திருவிழா நடத்த 5.6 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். அரசு சாரா பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு இலவச புத்தகங்கள் வழங்கப்படும்.

    பேருந்துகள்

    பேருந்துகள்

    500 மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளும் 2213 டீசலில் இயங்கும் பேருந்துகளும் வாங்கப்படும். மாணவர்களுக்கு இலவச சைக்கிள் திட்டத்திற்கு ரூ. 1062 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்திற்கு ரூ.1949 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சமூக நலத்துறைக்கு ரூ. 5922.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். முதல்வரின் முகவரி மூலம் 10 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 149 சமத்துவபுரங்கள் சீரமைக்க ரூ. 190 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்பு திட்டத்திற்கு ரூ.2,542 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    மற்ற அறிவிப்புக்கள்

    மற்ற அறிவிப்புக்கள்

    உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ படிப்பைத் தொடர தேவையான உதவிகளை அரசு வழங்கும். நூறு நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ரூ.2800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஏழை மக்களுக்கு அம்ருத் திட்டத்தின் கீழ் வீடுகளைக் கட்ட ரூ. 2030 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம், தமிழகத்தின் நிதிநிலை சீராகும்போது செயல்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

    வேளாண்

    வேளாண்

    சுற்று சூழல் துறைக்கு ரூ.849 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வேளாண் துறையில், வட்டியில்லா பயிர்கடன் தொடர்ந்து வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதேபோல் கால்நடைப் பராமரிப்பு துறைக்கு ரூ.1,315 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்படும்.. இது போக தனியாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். அதோடு இன்று மாலை சட்டசபை அலுவல் கூட்டம் கூடி, எத்தனை நாட்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கும் என்று முடிவு எடுக்கப்படும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+