விநாயகர் சதுர்த்தி+வீக் எண்ட்.. சொந்த ஊர் செல்ல.. தமிழ்நாடு முழுவதும் 1250 ஸ்பெஷல் பஸ்
சென்னை: வார இறுதி நாட்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 1,250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
வார இறுதி நாட்கள் மற்றும் அதையொட்டி வரும் விநாயகர் சதுர்த்தி காரணமாக ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊர் நோக்கி படையெடுத்து வருகின்றனர். சென்னையை பொறுத்த அளவில், ஒவ்வொரு ஆண்டும் சென்னைக்கு வரும் புலம் பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. எனவே சென்னை பெருநகரத்தின் மக்கள் தொகை 1 கோடியை கடந்திருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் தென் மாவட்டங்களிலிருந்து வருகின்றனர். அதேபோல விழா நாட்களில், பண்டிகை தினங்களில் இம்மக்கள் பெரிய அளவில் சொந்த ஊரை நோக்கி படையெடுக்கின்றனர்.

இப்படி சொந்த ஊர் போகும் போது போதுமான பேருந்துகள் கிடைக்காததால் தனியார் பேருந்துகளை நோக்கி நகர்கின்றனர். ஆனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தனியார் பேருந்துகள் நன்றாக காசு பார்க்கின்றன. எனவே பயணிகளின் வசதிக்காக இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் சுமார் 1,250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரை போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
இன்று "வெள்ளிக்கிழமை செப்டம்பம் 15ஆம் தேதி சென்னையிலிருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 650 பேருந்துகளும், சனிக்கிழமை நாளைய தினம் 200 பேருந்துகளும் இயக்கப்படும். மேலும் கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் மற்றும் பெங்களூரிலிருந்து தமிழகத்தின் பிற இடங்களுக்கு 400 பேருந்துகள் என மொத்தம் 1,250 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோன்று செப்டம்பர் 19ஆம் தேதி திங்கள்கிழமை சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூா் திரும்பும் பயணிகளின் வசதிக்காக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் தேவைகேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப தேவைப்பட்டால் மேலும் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications