வருது வீக் எண்ட் விடுமுறை.. நவம்பர் 15,16,17ல் சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்! சூப்பர்
சென்னை: நவம்பர் 15 பௌர்ணமி மற்றும் 16 சனி, 17 ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்திருக்கிறது. நவம்பர் 15ஆம் தேதி கிளாம்பக்கத்தில் இருந்து 460 பேருந்துகளும், 16ஆம் தேதி 245 பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் நவம்பர் 15ஆம் தேதி பௌர்ணமி வருகிறது. இதற்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலை, சதுரகிரி, கன்னியாகுமரி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக தலங்களுக்கு பொதுமக்கள் அதிக அளவில் செல்வது வழக்கம்.

இதேபோல 16, 17 தேதிகளில் வார இறுதி நாட்களும் வருகிறது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் தங்கி இருக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.
இதனால் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்படும் என கருதப்படுகிறது. இதனால் பண்டிகை காலங்களைப் போலவே வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," 15/11/2024 (வெள்ளிக் கிழமை) பௌர்ணமி, 16/11/2024 (சனிக்கிழமை) வார விடுமுறை என தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 15/11/2024 (வெள்ளிக் கிழமை) அன்று 460 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
16/11/2024 (சனிக்கிழமை) அன்று 245 பேருந்துகளும் கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 15/11/2024 மற்றும் 16/11/2024 ( வெள்ளி மற்றும் சனிக் கிழமை) அன்று 81 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், பௌர்ணமியை முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 15/11/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 265 பேருந்துகளும் 16/11/2024 (சனிக்கிழமை) அன்று 85 பேருந்துகளும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 15/11/2024, 16/11/2024 அன்று 11 பேருந்துகளும், மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து 15/11/2024, 16/11/2024 அன்று 05 பேருந்துகளும், ஆக 366 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்படி, ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக் கிழமை அன்று 5,969 பயணிகளும் சனிக்கிழமை அன்று 2,973 பயணிகளும் திங்கள் கிழமை அன்று 7,080 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது." என கூறப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications