Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ்! உங்க ஏரியாவில் இருந்தே சபரிமலை செல்ல ஸ்பெஷல் சொகுசு பேருந்துகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜையை ஒட்டி ஐயப்ப பக்தர்களுக்கு வசதியாக சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, திருச்சி உட்பட தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து சபரிமலைக்கு அடுத்த 60 நாட்களுக்கு சிறப்பு சொகுசு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து சென்று வருவது வழக்கம். அதிலும் குறிப்பாக கார்த்திகை, மார்கழி, தை உள்ளிட்ட மாதங்களில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை நோக்கி புனிதப் பயணம் மேற்கொள்வார்கள். சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை டிசம்பர் 26 ஆம் தேதியும், மகர விளக்கு பூஜை ஜனவரி 14 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

sabarimalai bus tamil nadu

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி நவம்பர் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் முதல் தினமும் பூஜை நடைபெறும். தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபடுவார்கள். தமிழ்நாட்டில் இருந்தும் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்குச் செல்வார்கள்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கேரள மாநிலம் சபரிமலைக்கு, 60 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இரா. மோகன் தெரிவித்துள்ளார்.

sabarimalai bus tamil nadu

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் ஆலயத்திற்கு, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின் போது, தமிழகத்திலிருந்து அய்யப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த ஆண்டும் 15.11.2024 முதல் 16.01.2025 வரையில், (சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம்), திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி / கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் (Ultra Deluxe) மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள (NSS) சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்படவுள்ளன. (சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி 27.12.2024 முதல் 30.12.2024 மாலை 5 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால் 26.12.2024 முதல் 29.12.2024 வரை இந்தச் சிறப்புப் பேருந்து இயக்கப்படமாட்டாது)

இந்த வருடம் பக்தர்கள் கூடுதலாக பயணம் செய்ய முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றினை கருத்தில் கொண்டு சென்னை மற்றும் இதர இடங்களிலிருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்குவதற்கு அனுமதி பெறப்பட்டு சிறப்பான முறையில் பேருந்துகளை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பேருந்து வசதி செய்து தரப்படும். மேலும், 60 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்புப் பேருந்துகளுக்கு ஆன்லைன் மூலமாக, www.tnstc.in இணையதளம் மற்றும் TNSTC Official app மூலம் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு, 9445014452, 9445014424 மற்றும் 9445014463 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+