கோடி கோடி கொட்டி.. தமிழக அரசு செய்யும் சிறுபான்மையினர் நலத்திட்டங்கள்! ஆய்வு செய்ய சிறப்பு குழு! செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுபான்மையினர் நலத்திட்டங்கள், அனைத்து மாவட்டங்களிலும், தகுதி வாய்ந்த மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்வதற்கு, மாவட்ட அளவிலான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதையடுத்து, சிறுபான்மையினர் நலத்திட்டங்களை ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தும் வகையில், தமிழக அரசு சிறப்புக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு அரசாணையும் வெளியிட்டிருக்கிறது.

சிறுபான்மையினர் நலனில் தமிழக அரசு மிகுந்த அக்கறையை காட்டி வருகிறது.. அந்த வகையில், தமிழக அரசின் சிறுபான்மையினர் நலத்திட்டங்களில் கல்வி உதவித்தொகை, பெண்கல்வி ஊக்குவிப்புத்தொகை, விடுதி வசதி, இலவச மிதிவண்டி மற்றும் சலவைப்பெட்டி வழங்குதல், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் கடன் உதவி ஆகியவை அடங்கும். இவை தவிர, சிறுபான்மையினர் நலன் சார்ந்த பிற திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது.

minority welfare schemes Tamil Nadu Government

இதுபோன்ற திட்டங்கள் மூலம் ஏராளமானோர் நேரடி பலனை பெற்றும் வருகிறார்கள்.. இந்நிலையில், சிறுபான்மையினர் நலத்திட்டங்கள், அனைத்து மாவட்டங்களிலும், தகுதி வாய்ந்த மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்வதற்கு, மாவட்ட அளவிலான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இதையடுத்து, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர் ஏ.சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

சிறுபான்மையினர் நலத் திட்டங்களை மாவட்ட அளவில் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தும் வகையில், திருச்சி கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் த.இனிகோ இருதயராஜ், தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர் டாக்டர் அ.சுபேர்கான், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகிய உறுப்பினர்களை கொண்ட குழுவை அமைத்து அரசு ஆணையிடுகிறது.

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள் ஆகிய சிறுபான்மையின மக்களின் சமூக, பொருளாதார கல்வி நிலையை மேம்படுத்த தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்புக் குழு மாவட்ட அளவில் ஆய்வு மேற்கொண்டு அவற்றை விரைவுபடுத்துவதற்கான பணிகளை செய்யும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சிறப்புக் குழு உறுப்பினர் நியமனம் தொடர்பாக சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு, நல ஆணையர் ஆசியா மரியம் தகவல் அனுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+