தேவநாதனை உடனடியாக கைது செய்து ஆஜா்படுத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: நிதி மோசடி வழக்கில் நிபந்தனைகளை பின்பற்றாத தேவநாதனை கைது செய்து ஆஜா்படுத்தும் வகையில் அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்து நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் பண்ட் நிதி நிறுவனத்தின் இயக்குநராகச் செயல்பட்டார் தேவநாதன். இவா் தனது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளா்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து தேவநாதன் உள்பட 6 பேரை சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தேவநாதனுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அக்டோபர் 30-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ரூ.100 கோடி டெபாசிட் தொகையாக செலுத்த உத்தரவிட்டிருந்தது.
மேலும், தேவநாதன் விசாரணைக்குத் தேவையான போது ஆஜராக வேண்டும், சாட்சிகளை கலைக்கக்கூடாது மற்றும் வேறு எங்கும் செல்லக்கூடாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் உயா்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றாத தேவநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி முதலீட்டாளா்கள் தரப்பில் வழக்கறிஞர் ஆா்.திருமூா்த்தி சென்னையில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், சென்னை உயர்நீதிமன்றம் விதித்த எந்த ஜாமீன் நிபந்தனைகளையும் தேவநாதன் யாதவ் நிறைவேற்றவில்லை. சென்னை உயர்நீதிமன்ற விதித்த காலக்கெடுவுக்குள் நூறு கோடி ரூபாய் வைப்புத் தொகை செலுத்தவில்லை, சரணடையவில்லை. மேலும் ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்றாத காரணத்தால் அது குறித்தும் வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரினார்.
இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்றாததால் அவரை உடனடியாக காவல்துறை கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தேவநாதனை கைது செய்து ஆஜர்படுத்தும் வகையில் அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications