SIR.. பல லட்சம் பேர் நீக்கம்.. ஒருவேளை உங்கள் பெயர் நீக்கப்பட்டால்.. உடனே இதை பண்ணுங்க.. விடாதீங்க!
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகள் தமிழ்நாட்டில் நடந்து முடிந்து உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒருவேளை உங்களின் பெயர் நீக்கப்பட்டால் என்ன செய்யலாம் என்பது தொடர்பான விளக்கங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
SIR-காக வழங்கப்படும் கணக்கெடுப்பு படிவத்தை பொதுமக்கள் நிரப்பிக் கொடுக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டு இருக்கும்.. முகவரி மாற்றம் செய்திருந்தாலும் அவர்கள் பெயர் பட்டியலில் இடம் பெறாது என்று அர்ச்சனா பட்நாயக், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார். அதாவது நீங்கள் ஆவணத்தை வாங்க வீட்டில் இல்லாமல் போய், அதை நிரப்பி முடியாமல் போனால் உங்கள் பெயர் நீக்கப்படும்.
ஆனால் இதில் மேல்முறையீடு செய்ய முடியும். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள விளக்கத்தில், இந்திய தேர்தல் ஆணைய 27.10.2025 ஆம் நாளிட்ட கடிதம் எண் 23/2025-ERS (Vol.II)-இன் படி வாக்காளர் பதிவு அலுவலர் வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களையும் சேர்த்து, வரைவு வாக்காளர் பட்டியலை தயாரிப்பார்.
மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு உள்ளது
வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் நிரப்பப்பட்ட வாக்காளர் கணக்கீட்டுப் படிவங்களை அளிக்க இயலாத வாக்காளர் குறித்த நேர்வில், படிவம் 6 உடன் குறிப்பிடப்பட்டுள்ள உறுதி மொழி படிவத்தையும் கோரிக்கைகள் மற்றும் மறுப்புரைகளுக்கு அளிக்கப்பட்ட காலத்திற்குள் தங்கள் பெயரை சேர்ப்பதற்கு தாக்கல் செய்யலாம். இந்த பட்டியலில் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் சரியில்லை என ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் ஜனவரி 18ஆம் தேதி வரை தெரிவிக்கலாம். இடம் மாறியவர்கள் படிவம் 8, புதியதாக சேர்ப்பவர்கள் படிவம் 6 ஆகியவற்றை பூர்த்தி செய்து ஆவணங்களுடன் வழங்கி, வாக்காளர் பட்டியலில் ஜனவரி 18ஆம் தேதிக்குள் இணைத்துக் கொள்ளலாம் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

1950 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 24 ஆம் பிரிவின் கீழ், 1950 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 24(a) பிரிவின் படி, வாக்காளர் பதிவு அலுவலரின் யாதொரு முடிவிற்கும் எதிராக, மாவட்ட நடுவரிடம் மேல்முறையீடு செய்யலாம். மேலும், முதல் மேல்முறையீட்டு அதிகாரி வழங்கிய முடிவிற்கு எதிராக, 24(b) ஆம் பிரிவின் கீழ், தலைமை தேர்தல் அதிகாரியிடம் இரண்டாம் மேல்முறையீடு செய்யலாம். இத்தகைய மேல்முறையீடுகள் 1960 ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளைச் சேர்ந்த, 27 ஆம் விதியின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளின்படி மேற்கொள்ளப்பட வேண்டும், என்று கூறி உள்ளது.
SIR என்பது, தகுதியற்ற வாக்காளர்களை நீக்கி, உண்மையான வாக்காளர்களைச் சேர்ப்பதன் மூலம் வாக்காளர் பட்டியலின் உண்மைத்தன்மையை பராமரிக்க, காலங்காலமாக மேற்கொள்ளப்படும் ஒரு விரிவான சரிபார்ப்பு செயல்முறையாகும். கடைசியாக 2002-2004ல் இந்த பணிகள் நடந்தது.
SIR என்றால் என்ன, அதன் முக்கியத்துவம் என்ன?
இது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் கியானேஷ் குமார், பல தசாப்தங்களாக, "கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் வாக்காளர் பட்டியலின் மோசமான தன்மை குறித்து தொடர்ந்து புகார் கூறி வருகின்றன" என்று தெரிவித்தார். 1951 மற்றும் 2004-க்கு இடையில் தேர்தல் ஆணையம் எட்டு SIR பணிகளை மேற்கொண்டது; கடைசியாக 2002-04 இல் நடைபெற்றது.
தற்போதைய இரண்டாம் கட்டப் பணியானது அந்தமான் & நிக்கோபார் தீவுகள், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப் பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கியது.
SIR பணிகள் தமிழ்நாடு
இந்திய தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு சிறப்பு சுருக்கத் திருத்தப் பணி காலக்கெடுவை ஒரு வாரம் நீட்டித்தது. கடந்த நவம்பர் மாதம் 4-ந் தேதி இந்த பணிகள் தொடங்கியது. தமிழ்நாட்டில் கடந்த 2002-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. எஸ்.ஐ.ஆர் பணிகளில் தமிழகத்தில் 68,470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், அதாவது பிஎல்.ஓக்கள் ஈடுபட்டனர். கடந்த வாரம் முடிய வேண்டிய பணிகள் 1 வாரம் நீட்டிக்கப்பட்டு இந்த வாரம் நிறைவு பெற்றது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications