SIR.. வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லைன்னா.. எப்படி விண்ணப்பிப்பது? எளிய வழிமுறை!
சென்னை: தமிழ்நாட்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நிலையில், வாக்காளர்கள் தங்கள் பெயர்களை தேர்தல் ஆணையத்தின் இணைய பக்கத்தில் சோதிக்க முடியும். ஒருவேளை உங்கள் பெயர் இடம்பெறாத பட்சத்தில்.. நீங்கள் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம்.. அல்லது புதிதாக விண்ணப்பம் செய்யலாம்.
இந்திய தேர்தல் ஆணையம் (ECI), தமிழ்நாட்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலை கடந்த டிசம்பர் 19, 2025 அன்று வெளியிட்டது. தமிழ்நாட்டில் மொத்தமாக 97,37,832 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் 15.18% பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 775 வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 77 லட்சத்து 60 ஆயிரத்து 322 பேர் உள்ளனர்.

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை எப்படி சோதிப்பது?
வாக்காளர் பட்டியலை PDF வடிவத்தில் பதிவிறக்கம் செய்ய, erolls.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு உங்கள் மாவட்டம் மற்றும் சட்டமன்றத் தொகுதியைத் தேர்வு செய்ய வேண்டும். இந்த வழிமுறைகளைத் தொடர்ந்து, உங்கள் தொகுதிக்கான வாக்காளர் பட்டியல் பதிவிறக்கப்படும்.
வாக்காளர்கள் தங்கள் பெயரை ஆன்லைனில் சரிபார்க்க பல வழிகள் உள்ளன.
1. தேசிய வாக்காளர் சேவை இணையதளமான voters.eci.gov.in-க்குச் சென்று "வாக்காளர் பட்டியலில் தேடு" வசதியைப் பயன்படுத்தலாம். உங்கள் வாக்காளர் அடையாள அட்டை (EPIC) எண், மொபைல் எண் அல்லது தனிப்பட்ட விவரங்கள் மூலம் தேட முடியும்.
2. ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களில் கிடைக்கும் வாக்காளர் ஹெல்ப்லைன் செயலி (Voter Helpline App) மூலமாகவும் இந்தச் சரிபார்ப்பை எளிமையாகச் செய்யலாம்.
3. அத்துடன், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கான PDF வாக்காளர் பட்டியல்களும் பதிவேற்றப்படும்.
4. ஆஃப்லைனில் சரிபார்க்க விரும்பும் வாக்காளர்கள், தங்கள் உள்ளூர் வாக்குச்சாவடியில் உள்ள சாவடி நிலை அலுவலரை (BLO) அணுகி வரைவு வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்கக் கோரலாம். இறந்தவர்கள், நிரந்தரமாக இடம் மாறியவர்கள் அல்லது கண்டுபிடிக்க முடியாத வாக்காளர்கள் தொடர்பான பட்டியல்களும் இணையதளங்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருந்தால் எப்படி மேல்முறையீடு செய்வது?
1. உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருந்தால் அல்லது விவரங்கள் தவறாக இருந்தால், திருத்தம் மேற்கொள்ள "உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள்" முகாம் வழியாக மேல்முறையீடு செய்யலாம். இந்த முகாம் பொதுவாக 30 நாட்களுக்கு நீடிக்கும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2. புதிய வாக்காளர்கள் அல்லது பெயர் விடுபட்டவர்கள் படிவம் 6-ஐச் சமர்ப்பிக்கலாம். அதாவது புதிதாக தங்கள் பெயரை பதிவு செய்ய நினைப்பவர்கள் இந்த படிவத்தை பயன்படுத்தலாம்.
3. பெயர், வயது அல்லது முகவரி போன்ற தவறான விவரங்களைத் திருத்த, படிவம் 8-ஐ பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.
4. வாக்காளர்கள் இந்தப் படிவங்களை வாக்காளர் சேவை இணையதளம் அல்லது வாக்காளர் ஹெல்ப்லைன் செயலி மூலம் ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.
5. அப்போது ஓர் அடையாளச் சரிபார்ப்பு எண் (tracking ID) வழங்கப்படும்.
6. நேரடியாகச் சமர்ப்பிக்க விரும்புவோர், தங்கள் சாவடி நிலை அலுவலர் (BLO) அல்லது தேர்தல் பதிவு அலுவலரை (ERO) உள்ளூர் தாலுகா அல்லது நகராட்சி அலுவலகங்களில் அணுகலாம். சிறப்பு முகாம்களும் உதவ முன்வரும்.
என்னென்ன ஆவணங்கள் தேவை?
பெயர்களைச் சேர்க்க அல்லது திருத்த விண்ணப்பிக்கும் வாக்காளர்கள், சில அத்தியாவசிய ஆவண நகல்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
1. அடையாள மற்றும் வயதுச் சான்றுக்கு ஆதார் அட்டை,
2. பான் அட்டை,
3. பிறப்புச் சான்றிதழ்
4. பாஸ்போர்ட் தேவை.
5. முகவரிச் சான்றுக்கு சமீபத்திய தண்ணீர்/மின்சாரம்/சமையல் எரிவாயு ரசீது,
6. ஆதார் அட்டை,
7. வங்கி பாஸ்புக் அல்லது இந்திய பாஸ்போர்ட் பயன்படுத்தலாம்.
மேலும், படிவம் 6 மூலம் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கும்போது, இரண்டு பாஸ்போர்ட் அளவு வண்ணப் புகைப்படங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயம். இவை வாக்காளர் பட்டியலின் முழுமையான தகவல்களை உறுதிப்படுத்தத் தேவைப்படுகின்றன.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications