கழிவுநீர் கலந்து தேங்கியதே.. நோய்கள் பரவும்.. தமிழக அரசின் உடனடி ஆக்ஷன்! நாளை சிறப்பு முகாம்கள்!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை (டிசம்பர் 9) 3000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்றும், புயல் மழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் 2000 முகாம்கள் நடைபெறும் எனவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை புரட்டி எடுத்தது கனமழை. கனமழையால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாகின. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. சென்னையில் வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், மேற்கு தாம்பரம் பகுதிகளில் இன்னும் மழைநீர் வீடுகளைச் சூழ்ந்துள்ளது.

மழைநீரோடு, கழிவுநீரும் கலந்து, வீடுகளில் தேங்கி இருப்பதாலும், இன்னும் வெள்ளம் வடியாமல் மழைநீர் தேங்கி உள்ள சூழலில், கொசு உற்பத்தி அதிகரிப்பதாலும் பருவகால நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சிறுவர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும், சளி, காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், சிறப்பு மருத்துவ முகாம்கள் நாளை நடைபெற உள்ளன.
இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தமிழ்நாடு முழுவதும் நாளை (09.12.2023) 3000 மருத்துவ மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 1000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே மக்கள் நல்வாழ்வுத்துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் ஒருங்கிணைந்து மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த 23.10.2023 தொடங்கி தற்போது வரை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும் முகாம் 1000 என்று அறிவிக்கப்பட்டு 2000- த்திற்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. அந்தவகையில் கடந்த 6 வாரங்களில் இதுவரை 13,234 முகாம்கள் நடைபெற்று அதில் 6,50,585 பேர் பங்கேற்று பயன்பெற்றுள்ளனர்.
தற்போது பருவமழைக் காலமாக உள்ள காரணத்தினால் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி நாளை (09.12.2023) அன்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் தமிழ்நாடு முழுவதும் 3000 இடங்களிலும் அதில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 1000 சிறப்பு மருத்துவ முகாம்கள் காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெறும்.
மேலும் சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோதாமேடு பகுதியில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து ஆய்வு செய்ய உள்ளேன். பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று பரிசோதனை மேற்கொண்டு மழைக்கால நோய்களிடமிருந்து தங்களை தற்காத்து கொள்ள வேண்டும்" என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications