‘The Goat’ விஜய்க்கு சாதகமாக முடிவெடுத்த உதயநிதி ஸ்டாலின்? அர்ச்சனா கல்பாத்தி ட்வீட்டை பாத்தீங்களா?
சென்னை: விஜய் நடித்துள்ள 'தி கோட்' திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ள நிலையில், விஜய் படத்துக்கு சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்ததற்காக தமிழக அரசுக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் 'தி கோட்' திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நன்றி தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'தி கோட்'- தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்தப் படத்தில் நடிகர்கள் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. 'தி கோட்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

'தி கோட்' படத்தை செப்டம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் சிறப்பு காட்சி திரையிட அனுமதி கோரி ஏஜிஎஸ் நிறுவனம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தது. இந்நிலையில் விஜய்யின் 'தி கோட்' திரைப்படத்தின் காலை 9 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. நாளை மட்டும் காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வர 'தி கோட்' திரைப்படத்தை 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ரஜினிகாந்த், விஜய், அஜித், போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கொடுப்பது வழக்கம். அஜித் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு படங்கள் வெளியான போது, சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அஜித் ரசிகர் ஒருவர் லாரியில் ஏறி நடனம் ஆடியபோது கீழே விழுந்து பலியான காரணத்தால் அதன்பிறகு எந்த படத்துக்கும் அதிகாலை சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்குவதில்லை.

இந்நிலையில், 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தின் ரிலீஸ் நாளன்று சிறப்புக் காட்சி திரையிடுவதற்கு அனுமதி கொடுத்ததற்காக தமிழ்நாடு அரசுக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் 'THE GOAT' படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், விஜய் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது தமிழக அரசு. அதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நன்றி தெரிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
-
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
ஸ்கீமுக்கு 10 செகண்டா? தலைமை செயலகத்தில் 75 நிமிட சர்ப்ரைஸ்! 436 திட்டங்களை விஜய் நகர்த்தியது எப்படி? -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
தமிழ்நாடு விஷம் குடித்து இருக்கிறது.. மக்கள் புரிந்து கொள்வார்கள்! தேர்தல் முடிவு பற்றி சுகி சிவம் பரபர பேச்சு -
நேரடி அரசியலில் விஜய்யின் நிழல்.. திருச்சி கிழக்கு தொகுதியில் ஜெகதீஷ் பழனிசாமி போட்டி? தவெக முடிவு! -
"விஜய் கோட் போடுவது பிரச்சனை இல்லை... எல்லாத்தையும் கோட்டை விடுவது தான் பிரச்சனை!" உதயநிதி தாக்கு -
எதிர்க்கட்சிகள் தீர்ந்து போன சக்தி சரி.. அப்போ நீங்க? விஜய்யை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய வேல்முருகன் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது! -
விஜய் VS உதயநிதி VS அண்ணாமலை.. தமிழ்நாடு அரசியலில் புதிய இன்னிங்ஸ்.. யாருக்கு சாதகம் தெரியுமா? -
விஜய் போல ரஜினியை ஃபாலோ பண்ணும் முதல்வர் மகன் சஞ்சய்.. பாடல் வரிகளில் பஞ்ச் கவனித்தீர்களா?












Click it and Unblock the Notifications