எடப்பாடி பழனிசாமிக்காக தயாராகும் பிரத்யேக பாடல்கள்.. அதிமுக நிகழ்ச்சிகளில் இனி புதிய மாற்றங்கள்!
சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு பிரத்யேக முறையில் பாடல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் அவர் சுற்றுப்பயணம் செல்லவிருக்கும் நிலையில், அவர் செல்லும் இடங்களிலெல்லாம் இந்தப் பாடல்களை ஒலிக்கவிட திட்டமாம்.
பூமி உள்ளவரை எங்க அம்மா புகழே நிலைத்திருக்கும்.. என்ற வரிசையில் இனி எடப்பாடி பழனிசாமியின் புகழ் புராணத்தையும் அதிமுக நிகழ்ச்சிகளில் கேட்கலாம்.

அதிமுக நிகழ்ச்சி
அதிமுக சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம், என எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் எம்.ஜி.ஆர். பாடல்கள் கட்டாயம் ஒலிக்கவிடப்படும். அந்தப் பாடல்களுக்கு மத்தியில் ஜெயலலிதாவின் புகழ் புராணமான 'பூமி உள்ளவரை எங்க அம்மா புகழே நிலைத்திருக்கும்' என்ற பாடலும் திரும்ப திரும்ப ஒலிக்கவிடப்படும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாடல்கள் மூலம் தொண்டர்களும் உற்சாகம் அடைவார்கள்.

எடப்பாடிக்கு பாடல்
இந்நிலையில் அதிமுகவில் தொண்டனாக இருந்து தலைவனாக உயர்ந்திருக்கிற எடப்பாடி பழனிசாமிக்காக 'தொண்டன் ஒரு தலைவன் ஆகிறான்' என்ற பாடல் பிரத்யேக முறை உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் இன்னும் மேலும் சில பாடல்கள் எடப்பாடி பழனிசாமியின் புகழ் பரப்பும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தப் பாடல்கள் எல்லாம் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செல்லும் போது அவர் செல்லும் இடங்களில் ஒலிக்கவிடப்படும் எனத் தெரிகிறது.

தனி டீம்
எடப்பாடி பழனிசாமியை தமிழகத்தில் ஒரு உறுதிமிக்க தலைவராக அரசியல் களத்தில் உயர்த்திக் காட்டும் வகையில் அவருக்கு தனி டீம் ஒன்று வேலை பார்த்து வருகிறது. இதன் வெளிப்பாடாக கடந்த மாதம் வரை அண்ணே என்று எடப்பாடி பழனிசாமியை அழைத்த பலரும் தலைவரே என்று இந்த மாதம் அழைக்கிறார்கள். ஒரு தலைவருக்கான இமேஜை பக்காவாக தொடர்ந்து கட்டமைத்து வருகிறது அந்த டீம்.

சுற்றுப்பயணம்
பாடல்கள் எல்லாம் ரெடி சுற்றுப்பயணம் எப்போது என்ற கேள்வி பலருக்கும் எழலாம், அடுக்கடுக்காக நீதிமன்ற வழக்குகள் இருப்பதால் அது தொடர்பான டிஸ்கஷனில் இப்போது இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. மழைக்காலம் முடிந்த பிறகு வரும் டிசம்பர் முதல் தனது சுற்றுப்பயணத்தை அவர் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இன்பதுரை எடுத்த சுப்ரீம் ஆயுதம்? சபாநாயகர் போட்ட 5 நிமிட உத்தரவு! சுப்ரீம் கோர்ட்டில் சிக்கும் தவெக? -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
10 வருடங்களில் 5 கட்சி.. மதுரை டாக்டர் சரவணன் கடந்து வந்த அரசியல் கட்சிகள் லிஸ்ட்! -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
"3 எம்.எல்.ஏக்களின் பதவி விலகலை 5 நிமிடத்தில் ஏற்றது ஏன்?” சபாநாயகருக்கு அதிமுக MP இன்பதுரை கேள்வி! -
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! -
“கூவத்தூர் மாடல் மறந்து போச்சா? தோல்வியை மறைக்க அரசு மீது பழிபோடுகிறார்” - எடப்பாடிக்கு தவெக பதிலடி -
அதிமுக ரெண்டுபட்டா விஜய்க்கு தான் கொண்டாட்டம்! பஞ்சாயத்தை கூட்டிய எடப்பாடி.. வேலுமணி வைத்த டிமாண்ட்! -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி











Click it and Unblock the Notifications