Specials: ரொம்ப மிஸ் பண்றோம்.. ரசிகர்களின் ஏக்கம் + பெருமிதம்.. லட்டு லட்டா கட்டுரைகள்.. இதை படிங்க
ரசிகர்களின் ஏக்கத்தை நிரப்பும் பிளாஷ்பேக் கட்டுரைகளை தொகுத்து தந்துள்ளோம்
சென்னை: ரத்த பந்தங்களை போலவே நம் வாழ்வில் கலந்துவிட்ட கலைஞர்கள் ஏராளம்.. தினம் தினம் மல்லுக்கட்டி அல்லாடும் பிழைப்புக்கு இடையிலும் இக்கலைஞர்களை பற்றின எத்தனையோ நினைவலைகள் நம் இதயத்தை சுற்றியபடியே இருக்கும்.. குறிப்பாக நடிகர், நடிகை, இயக்குனர்கள், பாடகர், பாடகி, போன்றோர்கள் நம் வாழ்வில் இரண்டற கலந்துவிட்டவர்கள். .
சிறுவயது முதலே ஏதோ ஒருவித தாக்கத்தில் இவர்கள் நம்மை கட்டிப்போட்டவர்கள்.. சுண்டி இழுத்தவர்கள்.. இனம்புரியாத மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள்.. இவர்களில் பலர் வயது முதிர்ச்சியால் கலைத்துறையில் ஒதுங்கிவிட்டனர்.. மேலும் சிலர் நம்மைவிட்டு பிரிந்தும் மறைந்தும் வருகின்றனர்.

காலில் சக்கரம் கட்டிக் கொண்டு பறக்கும் இந்த நவீன உலகல் இவர்களின் நினைவுகளை நம் அடிமனது இதயத்தில் வந்து போனாலும் முழுதுமாக அசைபோட நேரமிருப்பதில்லை. அப்படி ஒரு வாய்ப்பினைதான் முடிந்தவரை தொகுத்து நம் வாசகர்களுக்கு தந்துள்ளோம்.. இப்படிப்பட்ட கலைஞர்கள் நமக்கு பொக்கிஷங்கள் என்றே சொல்லலாம்.. கொரோனாவை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, இதையும் படிக்கலாமே.. இழந்த நினைவுகளை மீட்கலாமே!
- தெருவோரம் சுருண்டு கிடந்த சிறுவன்.. விஸ்வரூவமெடுத்து.. சிரிக்க வைத்து, அழவும் வைத்த.. சார்லிசாப்ளின்
- ஹை பிட்ச் பாடணுமா.. கூப்பிடுங்க ராகவேந்தரை.. உணர்ச்சி குவியலான முகம்.. மறக்க முடியாத கம்பீர குரலோன்!
- செந்தூரபூவே.. தூரமாக ஏன் போனாய்.. ஜில்லென்ற காற்றே.. ஏன் கரைந்து போனாய்.. "மயிலு" மறைந்த நாள்..இன்று
- அடி ஆத்தாடி.. தாலாட்டு, சோகம், விரகதாபம், காதல், ஏக்கம், ஊடல், குத்து.. நாம் தேடிய செவ்வந்தி பூ இது!
- தெய்வீக ராகம்.. தெவிட்டாத ஜென்ஸி.. கேட்டாலே போதும்.. பல ஜென்மங்கள் வேண்டும்... இன்னிசை இளவரசி!
- அன்னக்கிளி ஒன்ன தேடுதே.. 76ல் வீச ஆரம்பித்த தென்றல்.. இன்னும் வீரியம் குறையாத.. "ராஜா"ங்கம்!
- ரணங்களின் வலி.. இதயம் வரை நனைகிறதே.. என்னுள்ளே என்னுள்ளே.. உயிரை பிரித்து போனாயே ஸ்வர்ணலதா!
- சுழன்றடித்த "சூறாவளி" ஓய்ந்தது.. மறைந்து போன பரவை முனியம்மா.. உங்களை மறக்கவே முடியாது ஆத்தா!












Click it and Unblock the Notifications