Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

+303, +273.. இந்த நம்பர் ஞாபகம் இருக்கா.. இப்ப பாஜக லெவலே வேற.. மிரளும் கட்சிகள்.. அப்ப திமுக, காங்?

வரும் எம்பி தேர்தலில் எப்படியாவது 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற பாஜக மாஸ் பிளான் செய்கிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த முறை எம்பி தேர்தலில் அபார வெற்றி பெற்று, மீண்டும் அரியணை ஏறிவிட வேண்டும் என்ற முனைப்பில் ஈடுபட்டு வருகிறது டெல்லி பாஜக.. இதற்காக பல்வேறு வியூகங்களையும் கையில் எடுக்க போகிறதாம்.

கடந்த ஆண்டு பாஜகவுடனான கூட்டணியை முறித்த பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை, தெலுங்கானாவின் சந்திரசேகர ராவ் சந்தித்து பேசியிருந்தார்..

அப்போது, "மூன்றாம் முன்னணி என்ற கேள்விக்கு இடமில்லை... காங்கிரசை உள்ளடக்கிய ஒரு முன்னணி இருக்க வேண்டும்... அதன் பிறகு 2024-ல் பாஜகவை வீழ்த்தலாம்" என்று முதல்வர் நிதிஷ்குமார் கூறியிருந்தார்.

செக் பாஜக

செக் பாஜக

ஆனால், இப்போது அப்படி நிலைமை இல்லை.. மத்திய பாஜகவை கடுமையாக விமர்சித்து வருபவர்களில் முதல் நபராக சந்திரசேகர் ராவ் இருக்கிறார் என்றாலும், அவரது முன்னெடுத்து செல்லும் கூட்டணி எத்தகையது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. பாஜகவை தூக்கி வங்க கடலில் எரிய வேண்டும் என்று சொன்னதுடன், மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாம் முன்னணியை உருவாக்குவதற்கு பல்வேறு முயற்சிகளை செய்து வருவதுதான் அந்த எதிர்பார்ப்புக்கு காரணமாக அமைந்து வருகிறது.. சமீபத்தில்கூட, ஹைதராபாத்தில் பாரதிய ராஷ்டிர சமிதியின் மாநாடு நடைபெற்றது.

டி.ராஜா நச்

டி.ராஜா நச்

இந்த கூட்டத்தில், ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் கேரள முதல்வர், சிபிஎம் பினராயி விஜயன், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சிபிஐயின் டி ராஜா ஆகியோரை ஒரே மேடையில் தோன்ற செய்து, பாஜகவுக்கும் மட்டுமல்லாமல் காங்கிரசுக்கும் சேர்த்தே "அதிர்ச்சி வைத்தியம்" தந்திருந்தார். கர்நாடகாவை பொறுத்தவரை, முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அதனால், ஆட்சியை தக்க வைக்க பாஜக களத்தில் குதித்துள்ளது.. அம்மாநிலத்தில் 224 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

ஓங்கிய கை

ஓங்கிய கை

எனவே, கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதத்திற்கு முன்பாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலை உள்ளது.. சமீபத்தில், பாஜக சார்பில் ஒரு சர்வே மேற்கொள்ளப்பட்டது... இதில், பாஜகவுக்கு பெரும் பின்னடைவும், காங்கிரஸ் கட்சியின் ‛கை' ஓங்கியும் உள்ளதாக கூறப்பட்டிருந்தது.. அதாவது, மொத்தம் 224 தொகுதிகள் உள்ள நிலையில் 70 இடங்களுக்குள் மட்டுமே பாஜக வெற்றி பெறும் என்று சர்வே ரிப்போர்ட் கூறவும், டெல்லி பாஜகவே அதிர்ந்து போய் உள்ளது. அதேபோல, திரிபுராவில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது.. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 55 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், ராஜ்நாத் சிங் போன்றோர் இந்த வாரம் அங்கே பிரச்சாரத்துக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

ஸ்பெஷல் அட்டென்ஷன்

ஸ்பெஷல் அட்டென்ஷன்

ஆனால், மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் புது வியூக ரூட் ஒன்றை அங்கு மேற்கொள்ள போவதாக தகவல் வெளியாகி உள்ளது.. பாஜகவுக்கு எதிரான அணியை ஒன்றுதிரட்டுவதில், கடந்த 2 வருட காலமாகவே மம்தா பானர்ஜி முயன்றுவந்தாலும், பாஜக மீதான எதிர்ப்பு குரல் சமீபகாலமாக குறைந்து வருவதையும் அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். பேரவையிலேயே பிரதமரை பாராட்டி பேசியிருந்த நிலையில், பாஜகவுக்கு எதிரான கூட்டணியை அமைப்பதில், மம்தாவின் ரோல் எந்த அளவுக்கு தீவிரமாக இருக்கும் என்பதை உறுதியாக சொல்லமுடியவில்லை என்கிறார்கள்.

மிஷன் 273+

மிஷன் 273+

தமிழகம், கேரளாவில் கால் ஊன்ற, பாஜக அளவுக்கு அதிகமாக திணறி வரும்நிலையில், பல்வேறு மாநில முதல்வர்கள் பாஜகவுக்கு எதிரான கூட்டணியை தீவிரப்படுத்தியே வருகிறார்கள்.. இதனால்தானோ என்னவோ, பாஜகவின் வியூகங்களும் அதிகரித்தபடியே வருகின்றன.. தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது.. ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக தலைவர்கள் கள ஆய்வுகளை விரிவுபடுத்தி வருகிறார்கள்.. கடந்த 2014-ம் ஆண்டில் பாஜக "மிஷன் 273+"-ல் பணியாற்றி அதை அடைந்தது. அதேபோல, 2019-ம் ஆண்டில், 303 தொகுதிகளில் பாஜக வென்றிருந்தது.. எனவே, இந்த முறை 400 இடங்களிலாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளதாம்.

400 + 303

400 + 303

இந்த 400 இடங்களில், 160 தொகுதிகளில் ஸ்பெஷல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறதாம்.. ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்கு சாவடிகளில் கட்சியை பலப்படுத்தவும் டார்கெட் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.. அதாவது, 400 இடங்களை கடக்க இன்னும் +98 இடங்கள் மட்டுமே தேவை என்றும், தொண்டர்களின் கடின உழைப்பும் சேர்ந்தால், பாஜக வெற்றி பெற்று 4வது முறையாக அரியணையில் அமரும் என்று மிகுந்த உறுதிப்பிடிப்புடன் சொல்கிறார்கள் பாஜக வட்டாரத்தினர்... என்ன நடக்க போகிறது? பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+