கன்னியாகுமரி, ஈரோடு மக்களுக்கு தீபாவளி பரிசு.. ரயில்வே கொடுத்த சூப்பர் அப்டேட்
சென்னை: தீபாவளி அக்டோபர் 31 ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்படவுள்ள நிலையில் சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை - கன்னியாகுமரி, ஈரோடு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
தீபாவளி என்றாலே கொண்டாட்டம்தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாகவும், குதூகலமாகவும் கொண்டாடும் பண்டிகை என்றால் தீபாவளிதான். இந்தியாவில் தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். புத்தாடை, இனிப்பு, பட்டாசு என ஊரே களைகட்டும். இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வேலை, தொழில், கல்வி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று கொண்டாடுவது வழக்கம். பயணிகளின் வசதிக்காக பண்டிகையையொட்டி அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் உள்ளிட்டவை இயக்கப்படவுள்ளதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு தீபாவளிக்கு தொடர்ந்து நான்கு நாள்கள் விடுமுறை வருகிறது. இதனால் உற்சாகமடைந்துள்ள பொதுமக்கள் பலரும் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
சென்னையில் இருந்து சொந்த ஊா்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக 3 நாள்கள் அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே படுக்கை வசதிகொண்ட பேருந்துகளின் முன்பதிவு பெரும்பாலும் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு சென்னை - கன்னியாகுமரி, ஈரோடு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரிக்கு இன்று 11.25 மணிக்கும், மறுமார்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து நாளை மறுநாள் (அக்டோபர் 28) பிற்பகல் 2.45 மணிக்கு சென்னைக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. அதேபோல, ஈரோடு - சென்னை சென்ட்ரல் இடையே அக்டோபர் 30, 31, நவம்பர் 3 ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இந்த சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு இல்லை. இந்த விரைவு ரயில் ஈரோட்டில் இருந்து காலை 4.55 மணிக்கு புறப்பட்டு அன்றைய தினமே காலை 11.55 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையவுள்ளது. மறுமார்க்கமாக இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு ஈரோடு சென்றடைகிறது.
தீபாவளி பண்டிகையின் போது பயணிகளின் கூடுதல் நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications