டிடிவி தினகரன் சொன்னது போல் பாஜகவை கழற்றிவிட்டுவிட்டு அதிமுக+ தவெக கூட்டணி அமையுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவை கழற்றிவிட்டுவிட்டு அதிமுகவுடன் தவெக கூட்டணி அமைத்தால் என்னவாகும் என்பதை பார்க்கலாம். இது சாத்தியமா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

தி பிரிண்ட் எனும் ஆங்கில செய்தி நிறுவனம்தான் இந்த சர்வேயை எடுத்துள்ளது. ஒரு தொகுதிக்கு 1245 பேர் வீதம் 2.91 லட்சம் பேரிடம் இந்த கணிப்பு நடத்தப்பட்டது. அப்போது அவர்களிடம் என்டிஏ கூட்டணியில் தவெக இணைவது குறித்தும், அவ்வாறு இணையாமல் தனித்து போட்டியிடுவது குறித்தும் கேட்கப்பட்டது.

tamil nadu assembly election 2026 tamil nadu 2026

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக , அதிமுக ஆகிய முக்கிய கட்சிகள் இணைந்துள்ளன. இந்த சூழலில் தவெகவும் இணைந்தால் என்னவாகும் என சர்வே நடத்தப்பட்டது. ஒரு வேளை என்டிஏ கூட்டணியில் தவெக இணைந்தால், திமுகவுக்கு 50 சதவீத வாக்குகளும் என்டிஏ கூட்டணிக்கு 35 சதவீத வாக்குகளும் சீமானுக்கு 12 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தவெக மட்டும் தனித்து போட்டியிட்டால் திமுகவுக்கு 45 வாக்கு சதவீதமும் அதிமுக பாஜகவுக்கு 22 சதவீதமும் விஜய் கட்சிக்கு 23 சதவீதமும் வாக்குகள் கிடைக்கும். இந்த சூழலில் சீமான் கட்சிக்கு 5 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த சர்வே திமுகவுக்கு நேர்மறையான விஷயங்களை தெரிவித்தாலும் திமுகவுக்கு விஜய் சவாலாக இருப்பார். வரும் 2029 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலிலும் 2031 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலிலும் திமுகவுக்கு கடும் போட்டியாளராகவே விஜய் இருப்பார்.

பாஜககவை கழற்றிவிட்டுவிட்டு தவெகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் என்ன ஆகும் என்பது குறித்து சர்வே எடுக்க முயற்சிக்கப்பட்டது. ஆனால் அவ்வாறு எடுக்கப்படவில்லை. இதுகுறித்து தவெக ராஜ்மோகன் கூறியதாவது: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்து 48 மணி நேரம் ஆன நிலையில் கரூர் களநிலவரத்தை நாங்கள் அறிந்தோம். அது எங்களுக்கு சாதகமாகவே இருந்தது. எங்கள் மீது மக்கள் வைத்த நம்பிக்கை என்றும் சேதப்படுத்தப்படவில்லை. எங்களுக்கு திமுகவிடம் இருந்து எந்த பாராட்டு பத்திரமும் தேவையில்லை.

இது போன்ற வாக்கு சதவீதமும் நம்பகத்தன்மையும் வரும் மாதங்களில் தவெகவுக்கு அதிகரிக்கும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் எடுக்கப்படும் சர்வேயில் எங்கள் கட்சிக்கு நிறைய வாக்கு சதவீதம் இருப்பதாக சொல்லப்படும். இவ்வாறு ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

தற்போது அதிமுகவுடன் தவெக கூட்டணி வைக்குமா என்பதை பார்க்கலாம். ஏற்கெனவே பாஜகவை அதிமுக கழற்றிவிடும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். அதற்கேற்ப நடக்குமா என்றால் சாத்தியம் இருப்பதாக தெரியவில்லை.

விஜய் இதுவரை அதிமுகவை அந்தளவுக்கு பொதுவெளியில் விமர்சிக்கவில்லை. எனவே அதிமுகவுடன் கூட்டணிக்கு தவெக செல்லலாம். ஆனால் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் பிரச்சனை எழும். துணை முதல்வர் பதவிக்கெல்லாம் விஜய் ஓகே சொல்ல மாட்டார் என்றே தெரிகிறது.

அதே வேளை அதிமுக, பாஜகவை கழற்றிவிட யோசிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜகவின் புலனாய்வு அமைப்புகளின் ரெய்டுகளுக்கு அஞ்சியே பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது என எடப்பாடி பழனிசாமியை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் விமர்சித்து வருகிறார்கள். எனவே இந்த நிலையில் இது நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அதிமுகவும் தவெகவும் இணைந்தால் கணிசமான வாக்குகள் கிடைக்கும். இணைவாரா மாட்டாரா என்பது விஜய்தான் முடிவு செய்ய வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+