“ஸ்பெல்லிங் மிஸ்டேக்”.. அதுவும் அண்ணாமலை பெயரிலேயே - அமர் பிரசாத் ரெட்டியின் பெயரும் இருக்கே
சென்னை: அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரைக்கு ஊடக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அதற்கான அறிக்கையில் அண்ணாமலையின் பெயரே பிழையாக இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வரும் ஜூலை 28 ஆம் தேதி பாத யாத்திரையை தொடங்குகிறார். ராமேஸ்வரத்தில் தொடங்கும் இந்த பாத யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிலையில் இதற்கான ஊடக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.

இதுகுறித்து பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவரும், என் மண் என் மக்கள் பாத யாத்திரையின் இணைப் பொறுப்பாளருமான அமர் பிரசாத் ரெட்டி மற்றும், தமிழ்நாடு பாஜக துணைத்தலைவரும் என் மண் என் மக்கள் பாத யாத்திரையின் பொறுப்பாளருமான K.S.நரேந்திரன் ஆகியோரது பெயருடன் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
அதில், "அனைவருக்கும் வணக்கம்! தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை EX-IPS அவர்களின் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரையானது, வரும் ஜூலை 28, வெள்ளிக்கிழமை அன்று ராமேஸ்வரத்தில் தொடங்குகிறது! இதனை மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்கள் தொடங்கி வைக்கிறார் என்பது தாங்கள் அறிந்ததே !
இந்திய நாட்டை வளமான வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி எடுத்துச் சென்று கொண்டிருக்கும், மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் மீண்டும் 2024ல் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கவும், தமிழகமெங்கும் தாமரை மலரவும், தூய அரசியலை முன்னெடுக்கவும் இந்த யாத்திரையை எங்கள் தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் மேற்கொள்கிறார்!

இந்த பாதயாத்திரையின் ஊடக ஒருங்கிணைப்பாளரான திரு.ரெங்கநாயகலு, (தலைவர்,தமிழக பாஜக மாநில ஊடகப் பிரிவு) அவர்களுடன் இணைந்து, திரு.ராஜவேல் நாகராஜன் (நிறுவனர், பேசு தமிழா பேசு) அவர்கள் ஊடக இணை ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவார் என்பதை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்! வாருங்கள், கை கோர்ப்போம், லஞ்சம் ஊழல் இல்லா தமிழகம் படைப்போம்!" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதில் அந்த அறிவிப்பின் முதல் வரியிலேயே தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் பெயரிலேயே பிழையாக உள்ளது. இதனை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக?












Click it and Unblock the Notifications