மகாவிஷ்ணுவின் 10வது அவதாரம் என சொல்லி வந்த ஆன்மீக குரு.. கல்கி பகவான் காலமானார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆன்மீக குருவும் ஒன்னஸ் அமைப்பின் நிறுவனருமான கல்கி பகவான் (வயது 77), சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவரது இயற்பெயர் விஜய்குமார் நாயுடு ஆகும். நத்தம் பகுதியில் பிறந்த இவர், ஆரம்பத்தில் எல்ஐசி நிறுவனத்தில் பணியாற்றினார். பின்னர், 1980களின் இறுதியில் ஆன்மீக பாதையில் நுழைந்தார்.

Kalki Bhagavan

தன்னை மகாவிஷ்ணுவின் 10வது அவதாரமாக பிரகடனப்படுத்திக்கொண்ட இவர், தனது மனைவி பத்மாவதியுடன் இணைந்து ஒன்னஸ் இயக்கம் மற்றும் சித்தூர் அருகே கோல்டன் சிட்டி ஆன்மீக வளாகத்தை நிறுவினார். இவர்களுக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களும், பிரபலங்களும் சீடர்களாக இருக்கின்றனர். அவரது உடல் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள வரதய்யாபாலம் ஏகம் சேத்ரா ஆசிரமத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

இன்று தொடங்கி 3 நாட்களுக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருக்கும் என்று கல்கி அறக்கட்டளை அறிவித்திருக்கிறது.

இவர் மிக குறுகிய காலத்தில் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்த்து புகழ்பெற்றார். இதற்கு காரணம் அவர் அறிமுகப்படுத்திய தனித்துவ ஆன்மீக முறைகளும் அவரது பிரச்சாரங்களும்தான். 1989ம் ஆண்டு, தான் மகாவிஷ்ணுவின் 10வது அவதாரமான கல்கி என்று தன்னைதானே பிரகடனப்படுத்திக்கொண்டார். கலியுகத்தின் துயரங்களை போக்க வந்த கடவுள் அவதாரம் என்று மக்கள் இவரை நம்ப தொடங்கினர்.

இவரும் இவரது மனைவி பத்மாவதியும் இணைந்து தங்களை 'அம்மா பகவான்' என்று அழைத்துக்கொண்டனர். தெய்வீகத் தம்பதியர் என்ற இந்த வடிவம் குடும்பமாக வாழும் சாதாரண மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஒன்னஸ் என்ற உலகளாவிய ஆன்மீக இயக்கத்தை தொடங்கிய இவர்கள், மனிதர்களின் மூளையில் உள்ள நரம்பியல் மாற்றங்களை ஏற்படுத்தி, அவர்களை உடனடியாக ஆன்மீக விழிப்புணர்வு நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்று கூறி தீக்ஷா என்ற ஆசீர்வாத முறையை அறிமுகப்படுத்தினார்.

இவருடைய தியான முறைகள் மற்றும் தத்துவங்கள் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வெளிநாட்டு பக்தர்களையும் பெருமளவில் ஈர்த்தது. ஆந்திராவின் வரதய்யாபாலம் பகுதியில் பிரம்மாண்டமான வெள்ளை பளிங்கு கற்களால் ஒன்னஸ் டெம்பிள் என்ற ஆலயத்தை கட்டினார். இது உலகத்தரம் வாய்ந்த தியான மையமாக மாறி.. உலக பயணிகளை ஈர்த்தது. அதே நேரத்தில் இவரது ஆசிரமத்தில் வசூலிக்கப்பட்ட அதிகப்படியான கட்டணங்கள் மற்றும் கடந்த காலங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனைகள் போன்ற சில சர்ச்சைகளும் அவரை ஊடகங்களில் தொடர்ந்து பேசப்படும் நபராக மாற்றின என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+