Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விளையாட்டு துறை ஸ்டார் துறையாக வளர்கிறது.. உதயநிதி மேடையில் இருக்க.. பாராட்டி பேசிய முதல்வர் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வீரர்கள் பதக்கங்களை வெல்வது பெருமையாக உள்ளது என்றும் திராவிட மாடல் அரசு அனைத்து துறைகளிலிலும் கவனம் செலுத்தி வருகிறது என்றும் ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார்

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கினார். தொடர்ந்து விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:- சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழக வீரர்கள் அதிக பதக்கங்களை வென்றுள்ளனர் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

Sports sector in Tamil Nadu is growing as a star sector: Chief Minister MK Stalin praises

நாட்டின் ஒட்டு மொத்த பதக்கங்களில் 28 சதவீதம் தமிழ்நாட்டில் இருந்து பெற்றுள்ளோம்.. இதன் மூலம் தமிழ்நாட்டின் விளையாட்டு துறை ஸ்டார் துறையாக வளர்ந்து வருகிறது. இந்தியாவிற்கு மற்றும் தமிழ்நாட்டிற்கு பெருமை தேடி தந்த தமிழ்நாட்டை சேர்ந்த 1,864 விளையாட்டு வீரர்களுக்கு 52 கோடியே 82 லட்சம் என்ற உயரிய தொகை, ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

முதலமைச்சர் கோப்பை என்ற பெயரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், மற்ற அரசு ஊழியர்கள் மாவட்ட மற்றும் மாநில அளவில் கபடி, சிலம்பம், கூடைப்பந்து, கைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட 15 வகையான போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்படுகின்றன. இதில் மாவட்ட, மண்டல அளவில், 3 லட்சத்து 21 ஆயிரம் வீரர்கள் பங்கேற்றனர். மண்டல அளவிலான போட்டிகளில் 27,054 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இந்த முதலமைச்சர் கோப்பை போட்டியை நடத்த 50 கோடியே 80 லட்சம் ஒதுக்கீடு செய்தோம். இதில் பரிசுத்தொகை மட்டும் 20 கோடியே 30 லட்சம் ரூபாய். மாநிலத்தில் விளையாட்டு மேம்பாட்டிற்காக மட்டும் பொதுமக்கள் மற்றும் கார்பரேட்டுகளுடன் இணைந்து தமிழ்நாடு சேம்பியன்ஸ் பவுண்டேசன் என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. ஒருபுறம் துவக்க நிலையில் இருந்த விளையாட்டு வீரர்களையும், மறுபுறம் விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களையும் ஊக்குவிக்க அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு செய்து வருகிறது.

போட்டிகளில் கலந்துகொள்வது விளையாட்டு என்பது உடல் வலிமையும், உள்ள வலிமையும் உள்ளடக்கியது. அறிவு, உடலை உறுதி செய்ய அதற்கான முன்னெடுப்புகளை இளைஞர் நலன், விளையாட்டுத்துறை செய்ய வேண்டும். ஆசிய போட்டியில் 5வது இடம் பிடித்த தமிழ்நாடு முதல் இடத்திற்கு முன்னேற வேண்டும் என்று கேட்டு அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் இந்த நேரத்தில் மீண்டும் ஒருமுறை வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+