இந்த படத்தை பாருங்க! அதுல ஒரு தப்பு இருக்கு! 7 செகன்ட்ஸில் சொல்லுங்க பார்ப்போம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மூளையை ஏமாற்றும் வகையில் அமைந்துள்ள இந்த படத்தில் உள்ள ஒரு தவறை 7 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும்.

மூளையையும் கண்களையும் குழப்பும் ஒரு விதமான விளையாட்டே ஆப்டிகல் இல்யூஷன் ஆகும். இதை ஒரு கண்கட்டி வித்தை என்றே சொல்லலாம். மிகவும் கெட்டிக்காரத்தனமாக யோசித்தால் நிச்சயமாக கண்டுபிடித்துவிடலாம்.

Spot the mistake in the picture with in 7 seconds

இந்த படங்கள் நம்மை குழப்புவதோடு கவனிக்கும் ஆற்றலையும் சோதித்து பார்க்கும் வகையில் இருக்கிறது. இதை நாம் கண்டுபிடிப்பதை வைத்து நமது மூளையின் செயல்பாடுகளை புரிந்து கொள்ள விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது.

இது மூளைக்கு நல்ல வேலை கொடுக்கும் செயலாகவும், கண்களால் தேடுவதன் மூலம் கண்களுக்கு ஒரு வித பயிற்சியாகவும் இது இருக்கிறது எனலாம்! இது போன்ற படங்கள் இணையதளத்தை கலக்கி வருகின்றன. கொடுக்கப்பட்டுள்ள ஒரு படத்தில் மறைந்திருக்கும் தவறை கண்டுபிடிக்க வேண்டும்.

அதிலும் 7 வினாடிகளில் அந்த தவறை கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் ஜீனியஸ்தான். பெரும்பாலும் 90 சதவீதம் மக்கள் சரியாக கண்டுபிடிக்கவில்லை. படத்தை பார்த்தால் எந்த தவறும் இல்லாமல் இருக்கும். ஆனால் அதில் உற்று பார்த்தால் நிச்சயம் தவறு இருக்கும்.

என்ன கண்டுபிடித்துவிட்டீர்களா, நாங்கள் சொல்லிவிடுகிறோம். ஒரு பெண் நாயை வைத்துக் கொண்டிருக்கிறார். ஒரு ஆணும் பெண்ணும் நடந்து வருகிறார்கள். அது போல் ஒரு பெண் ஒரு பேப்பரை படித்துக் கொண்டிருக்கிறார். அந்த இடத்தில்தான் தவறு இருக்கிறது. இப்பயாவது கண்டுபிடித்துவிட்டீர்களா.

இல்லையா! அதாவது அந்த பெண் பேப்பரை தலைகீழாக வைத்து படித்துக் கொண்டிருக்கிறார். அதுதான் தவறு! என்ன தலையில் அடித்துக் கொள்கிறீர்களா, ஜஸ்ட் மிஸ் என்கிறீர்களா? அதற்குத்தான் நாங்கள் சொன்னோம். சரியாக பாருங்கள் என!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+