வியக்கும் வண்ணம் சாதனைகள் புரிவீர்! உதயநிதி ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வாழ்த்து!
சென்னை: எல்லோரும் வியக்கும் வண்ணம் விளையாட்டு மேம்பாட்டுத் துறையில் சாதனைகள் புரிய வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டைமான் வாழ்த்து தெரிவித்துள்ளர்.
தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அலுவலகத்துக்கு இலங்கையிலிருந்து செந்தில் தொண்டைமான் அனுப்பியுள்ள வாழ்த்து விவரம் வருமாறு;

''மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம்.
இன்று தமிழக அமைச்சரவையில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக நீங்கள் பொறுப்பேற்றுக் கொண்டதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
தமிழ்நாடு முதலமைச்சராக பதவி வகிக்கும் மாண்புமிகு. மு.க. ஸ்டாலின் அவர்கள் மக்கள் நலன் காக்கும் எண்ணற்ற திட்டங்களை சிறந்த முறையில் செயல்படுத்தி வருகிறார்.
அவருடைய தலைமையின் கீழ் இப்போது மாண்புமிகு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நீங்கள் தங்கள் துறையில் அனைவரும் வியக்கும் வண்ணம் பல்வேறு சாதனைகள் புரிந்து மக்கள் போற்றும் திட்டங்களை செயல்படுத்த மனதார வாழ்த்துகிறேன்.'' இவ்வாறு செந்தில் தொண்டைமான் கூறியிருக்கிறார்.
இதனிடையே அமைச்சர் உதயநிதிக்கு வெளிநாட்டிலிருந்து வந்த முதல் வாழ்த்து இலங்கையிலிருந்து என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications