நிவாரண உதவி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நன்றி கடிதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் இலங்கை மக்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகளை வழங்குவதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார்.

இலங்கையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. அத்துடன் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கை மக்கள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். தலைநகர் கொழும்பு காலி முகத் திடலில் 4 வாரங்களாக இந்த போராட்டம் தொடருகிறது. இலங்கையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகும் கோரிக்கை வலுத்தும் வருகிறது. ஆனால் தாம் பதவி விலக முடியாது என்கிறார் மகிந்த ராஜபக்சே.

 தமிழகம் உதவி

தமிழகம் உதவி

இந்த நிலையில் இலங்கையில் அவதிப்படும் மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு நிவாரணப் பொருட்களை அனுப்பும் என சட்டசபையில் தனி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்து நிறைவேற்றினார். இது தொடர்பாக மத்திய அரசுக்கும் முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பி ஒப்புதல் பெற்றார். அத்துடன் ஆளும் திமுக சார்பாக ரூ1 கோடி நிதி உதவியும் வழங்கப்பட்டது. திமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் தங்களது 1 மாத ஊதியத்தையும் இலங்கை மக்களுக்கான நிவாரண உதவியாக வழங்கி உள்ளனர். தமிழக அரசியல் கட்சிகளும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன.

 இலங்கை நாடாளுமன்றத்தில்..

இலங்கை நாடாளுமன்றத்தில்..

இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய தமிழ் அரசியல் கட்சித் தலைவர் மனோ கணேசன், இந்தியாவில் தமிழ் மாநிலம், தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பின்வரும் அறிவிப்பை செய்துள்ளார். இலங்கையில் வாடும் அனைத்து மக்களுக்குக்குமான நிவாரண உதவியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இதை முன்னெடுப்பதற்காக ஒன்றிய அரசின் அனுமதியையும் இலங்கை அரசின் ஒப்புதலையும் அவர் கேட்டு பெற்றுள்ளார்.

 தமிழக உதவியால் நெகிழ்வு

தமிழக உதவியால் நெகிழ்வு

ஆளும் கட்சியான திமுக ரூ1 கோடி நிதி உதவி கொடுத்துள்ளது. அதிமுக ரூ50 லட்சம் கொடுத்துள்ளது. எம்.எல்.ஏக்கள் ஒரு மாத ஊதியம் கொடுத்துள்ளனர்.இன்னமும் தொடர்ந்து கொடுத்து கொடுக்கின்றனர். இதனைப் பார்க்கும் போது எங்களுக்கு மனம் நெகிழ்கிறது. ஒட்டுமொத்த இலங்கையருக்கும் உதவ தீர்மானித்து, நம் தமிழறிஞர் கணியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே; யாவரும் கேளீர்" என்ற கூற்றை மெய்ப்பித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின் என்றார்.

 ராஜபக்சே கடிதம்

ராஜபக்சே கடிதம்

இதனைத் தொடர்ந்து இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக சட்டப்பேரவையில் தாங்கள் கொண்டுவந்த தனித் தீர்மானத்தின்படி இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று தாங்கள் அறிவித்துள்ளமை தங்களது நல்லெண்ணத்தைக் குறித்து நிற்கின்றது. இலங்கைப் பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டுப் பிரச்சனையாகப் பார்க்காது மனிதாபிமான அடிப்படையில் நோக்கும் தங்களிற்கும், தமிழ்நாடு மாநில அரசிற்கு இலங்கை மக்கள் சார்பாக மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறுமகிந்த ராஜபக்சே கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+