மயிலாப்பூரில் ஒரு ரூபாயில் உயர்தரமான மருத்துவ வசதி.. மிக மிக குறைந்த கட்டணத்தில் ஸ்கேனிங் வசதிகள்
சென்னை: சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம் சார்பில், ஏழை எளிய மக்களுக்காக ஒரு அறக்கட்டளை மருத்துவமனை செயல்படுகிறது. இங்குப் பல மருத்துவச் சேவைகள் கட்டணமின்றி வழங்கப்படுகிறது. வெறும் ஒரு ரூபாயில் பல்வேறு நோய்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது. இங்கு பல்வேறு பரிசோதனைகள் மிகமிக குறைந்த கட்டணத்தில் செய்யப்பட்டு வருகின்றன. பல்வேறு கார்ப்பரேட் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் இங்கு தினமும் வந்து சேவை செய்து வருகிறார்கள். அதுபற்றி பார்ப்போம்.
சென்னையில் மயிலாப்பூர், மந்தைவெளி, ராஜா அண்ணாமலைபுரம், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, பட்டினம்பாக்கம் போன்ற மயிலாப்பூரை சுற்றியுள்ள மக்களுக்கு மயிலாப்பூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம் நடத்தி வரும் இலவச மருத்துவ சேவைகள் பற்றி தெரிந்திருக்கும். ஆனால் மற்றவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு. அங்கு ஏரளான சிகிச்சைகள் மிக தரமாகவும், இலவசமாகவும் அளிக்கப்படுகின்றன. பல்வேறு பெரிய மருத்துவமனைகளில ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டியுள்ள நிலையில், மயிலாப்பூர் சென்றால் இலவசமாகவே சிகிச்சை பெறலாம். அதேபோல் ஆய்வக பரிசோதனைகளும் மிகமிக குறைந்த கட்டணத்தில் செய்யப்பட்டு வருகிறது.

'மனிதாபிமானத்துடன் கூடிய கடவுள் சேவை' என்ற ஸ்ரீ ராமகிருஷ்ணரின் கொள்கையின்படி, மருத்துவ வசதி இல்லாதவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதே இதன் முதன்மை நோக்கமாக இருக்கிறது. ஆண்டுதோறும் சுமார் 2,20,000 நோயாளிகளுக்கு மேல் இங்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ராமகிருஷ்ணா மடம் வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆலோசனையும் மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன: இந்த தகவலுடன் அதன் ஆங்கில பெயர்களும் அடைப்பு குறிக்குள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆய்வு பெயர்களும் , சில பெயர்களும் ஆங்கிலத்தில் இருந்தால் பலரும் அறிந்து கொள்வார்கள் என்பதால், அந்த பெயர்களும் உள்ளன.
பொது மருத்துவம் (General)
கண் மருத்துவம் (Eye)
காது, மூக்கு, தொண்டை (ENT)
பல் மருத்துவம் (Dental)
சிறுவர் மருத்துவம் (Paediatrics)
நீரிழிவு (சர்க்கரை நோய்) (Diabetes)
மகளிர் மருத்துவம் (Gynaecology)
நுரையீரல் மருத்துவம் (Pulmonology)
எலும்பு மற்றும் மூட்டு மருத்துவம் (Orthopaedic)
இதய நோய் மருத்துவம் (Cardiology)
பிசியோதெரபி (Physiotherapy)
இரைப்பை குடல் மருத்துவம் (Gastroenterology)
சரும மருத்துவம் (Dermatology)
நரம்பியல் மருத்துவம் (Neurology)
ஹோமியோபதி (Homeopathy)
சித்தா (Siddha)
இயற்கை மருத்துவம் (Naturopathy)
அக்குபஞ்சர் (Acupuncture)
ஆலோசனை மற்றும் மருந்து: இங்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

3. நவீன மருத்துவப் பரிசோதனைகளுக்கான வசதிகளும் இங்கு உள்ளன:
டிஜிட்டல் எக்ஸ்-ரே (Digital X-Ray), பல் ஆர்.வி.ஜி (Dental RVG), ஓ.பி.ஜி (OPG).
டிஜிட்டல் மேமோகிராம் (Digital Mammogram).
ஆய்வக உயிர் வேதியியல் பகுப்பாய்வு (Laboratory Biochemical analysis) - Mindray (BS600M) கருவி மூலம் செய்யப்படுகிறது.
முழு தானியங்கி அமைப்பு (Fully automated system) - தைராய்டு (Thyroid), செல் எண்ணிக்கை (Cell Counter) ஆகியவற்றுக்கானது.
கலர் டாப்ளர் (Colour Doppler), அல்ட்ராசோனோகிராபி (Ultrasonography), எக்கோகார்டியோகிராம் (Echocardiogram).
ENT எண்டோஸ்கோபி (ENT Endoscopy), ஆடியோகிராம் (Audiogram).
மேல் GI எண்டோஸ்கோபி (Upper G.I. Endoscopy), கொலனோஸ்கோபி (Colonoscopy), ஸ்பைரோமெட்ரி (Spirometry) போன்றவை.
ஏழைகளுக்கு இலவசமாகக் கண் பரிசோதனை செய்து, அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு உரிய உதவிகளைச் செய்து, அறுவை சிகிச்சையும் இலவசமாகச் செய்யப்படுகிறது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு முகாம்கள் அடிக்கடி நடத்தப்படுகின்றன. ஆய்வகப் பரிசோதனைகளை பொறுத்தவரை மிகவும் குறைந்த கட்டணத்தில் செய்யப்படுகின்றன.
முக்கியமான தகவல்கள்
மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் தற்போது பல மருத்துவப் பரிசோதனைகளைச் சந்தை விலையைவிடக் மிகக் குறைந்த சலுகை விலையில் (Hugely Subsidized Cost) வழங்கி வருகிறது.
1. புதிய பரிசோதனை வசதிகள்
டிஜிட்டல் மேமோகிராம்: மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய உதவும் இந்தப் பரிசோதனை, நோயாளிகளுக்கு வெறும் ₹300/- என்ற மிகக் குறைந்த கட்டணத்தில் இப்போது வழங்கப்படுகிறது.
2. மருத்துவ ஆலோசனைக் கட்டணங்கள்
நிபுணர் ஆலோசனை: இங்குள்ள சிறப்பு மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவதற்கான கட்டணம் வெறும் ₹1/- மட்டுமே ஆகும்.
3. பிசியோதெரபி சிகிச்சை
பிசியோதெரபி : உடற்பயிற்சி மற்றும் இயன்முறை சிகிச்சைக்கான அனைத்துச் சாதனங்களுடன் (மெழுகு குளியல் (Wax Bath), அல்ட்ராசவுண்ட் (Ultrasound), யு.எஸ்.டபிள்யூ.டி (USWD) உட்பட) சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு சிகிச்சைக்கு ₹50/- மட்டுமே கட்டணம் வாங்கப்படுகிறது
உயர்தர நிபுணர்களின் சேவை
கார்பரேட் மருத்துவமனைகளின் நிபுணர்கள்: ஆச்சரியப்படும் விதமாக, பெரிய கார்பரேட் மருத்துவமனைகளில் பணியாற்றும் முன்னணி சிறப்பு மருத்துவர்கள் வாரத்திற்கு ஒரு முறை இங்கு வந்து இலவசமாக சேவை செய்கிறார்கள். எண்டோஸ்கோபி / கொலனோஸ்கோபி: இந்த இரண்டு முக்கியமான மற்றும் விலையுயர்ந்த பரிசோதனைகளும் வாரத்திற்கு ஒருமுறை இங்கு நடத்தப்படுகிறது. அதேநேரம் ஞாயிறு தவிர மற்ற நாட்களில் சிகிச்சை உண்டு. சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை பெற காலையியே சென்று விட வேண்டும். அது தான் எளிதாக இருக்கும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications