தங்கம் வாங்க வேண்டாம்னு ஏன் பிரதமர் சொல்கிறார் தெரியுமா? உண்மையான சிக்கலை விளக்கிய ஸ்ரீதர் வேம்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சமீபத்தில் இந்திய பொருளாதாரம் 7.8% வேகத்தில் வளர்வதாக பெருமிதம் தெரிவித்திருந்த பிரதமர் மோடி, அதேநேரம் மக்கள் வெளிநாடுகளில் திருணம், தங்கம் வாங்குவது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். பிரதமர் மோடி இதுபோல சொல்ல என்ன காரணம்.. இந்திய பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்தாலும் தங்கம் வாங்க வேண்டாம் என அவர் சொல்ல காரணம் என்ன என்பதை ஸ்ரீதர் வேம்பு விளக்குகிறார்.

இந்திய பொருளாதாரம் 7.8% என்ற வலுவான வேகத்தில் வளர்ந்து வருவதாக சமீபத்தில் மத்திய அரசு கூறியிருந்தது. இது தொடர்பாக பிரதமர் மோடியும் கூட பெருமிதம் தெரிவித்திருந்தார். அப்போது அவர் வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குவது, வெளிநாட்டில் திருமணம் நடத்துவது உள்ளிட்ட செலவுகளை குறைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

Sridhar Vembu Modi gold

ஸ்ரீதர் வேம்பு

இந்திய பொருளாதாரம் இவ்வளவு சிறப்பாக இருக்கும் போது ஏன் தங்கம் வாங்கக்கூடாது.. ஏன் வெளிநாட்டில் திருமணம் செய்யக்கூடாது என்று பல்வேறு நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த முரண்பாடு குறித்து ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விளக்கம் அளித்துள்ளார். இந்தியா வேகமாக வளர்ந்தாலும், அந்த வளர்ச்சியை தக்கவைக்க தேவையான எரிசக்தி மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தில் வெளிநாட்டை இன்னும் சார்ந்திருப்பதே முக்கிய பிரச்சனை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதார வளர்ச்சி

இந்தியா 7.8% பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்துள்ள நிலையில், வெளிநாட்டில் பணம் செலவிடுவதில் கட்டுப்பாடு தேவைப்படுவது முரண்பாடாக தோன்றலாம். ஆனால் பொருளாதாரம் வேகமாக வளரும்போது, இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தேவையும் அதிகரிக்கலாம் என்கிறார் ஸ்ரீதர் வேம்பு! குறிப்பாக இந்தியாவின் தொழில் உற்பத்தி மற்றும் நுகர்வு அதிகரிக்கும்போது, வெளிநாட்டிலிருந்து பெறப்படும் எரிசக்தி மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்திற்கான தேவையும் அதிகரிக்கும். இதனால் பொருளாதார வளர்ச்சி அதிகமாக இருந்தாலும், நாட்டின் அந்நிய செலாவணிக்கு தொடர்ந்து அழுத்தம் ஏற்படலாம்.

இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிப்பது வெளிநாட்டு பணத்தை ஈட்ட உதவும். ஆனால் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களே பல நேரங்களில் இயந்திரங்கள், உதிரி பாகங்கள், மூலப்பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கின்றன. இதை குறிப்பிட்டும் ஸ்ரீதர் வேம்பு, செமிகண்டெக்டர் பிராசஸர், கிராபிக் பிராசஸர், அதிநவீன சாப்ட்வேர் போன்ற துறைகளில் இந்தியா இன்னும் தனது உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்த வேண்டியுள்ளது என ஸ்ரீதர் வேம்பு குறிப்பிட்டுள்ளார்.

அந்நிய செலாவணி

இதனால் ஏற்றுமதி அதிகரிப்பது மட்டுமே உடனடியாக அந்நிய செலாவணி மீதான அழுத்தத்தை நீக்கிவிடாது. ஒருபுறம் ஏற்றுமதி மூலம் வெளிநாட்டு பணம் கிடைத்தாலும், மறுபுறம் உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்கு தேவையான இறக்குமதிகளுக்காக அந்த பணம் செலவாகிறது. ஸ்ரீதர் வேம்பு தனது கருத்தை விளக்கும்போது ஜப்பான், தைவான், தென் கொரியா மற்றும் சீனா போன்ற கிழக்கு ஆசிய நாடுகளின் வளர்ச்சி பாதையை சுட்டிக்காட்டுகிறார். இந்த நாடுகள் வேகமாக வளர்ந்த காலகட்டத்திலேயே உள்நாட்டு தொழில்நுட்ப திறன், தொழில் உற்பத்தி ஆகியவற்றையும் சேர்த்து வலுப்படுத்தின.

இலக்கு

இந்தியாவின் நீண்டகால இலக்கு வெறும் ஜிடிபி வளர்ச்சியாக மட்டும் இருக்கக்கூடாது என்று சொல்லும் அவர், அந்த வளர்ச்சிக்கு தேவையான தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தியை முடிந்தவரை உள்நாட்டிலேயே உருவாக்கும் திறனை வளர்ப்பதும் அவசியம் என ஸ்ரீதர் வேம்பு கூறுகிறார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிகரிப்பதன் மூலம் இறக்குமதி செய்யப்படும் எரிசக்தியின் மீதான சார்பை குறைக்க முடியும். அதேபோல் உயர்தர தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயே உருவாக்குவதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து வாங்க வேண்டிய பொருட்கள் அளவையும் குறைக்க முடியும்.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்தாலும் கூட பல விஷயங்களை நாம் வெளிநாடுகளில் இருந்து வாங்க வேண்டி இருக்கிறது. இதனால் நமது கைகளில் இருக்கும் அந்நிய செலாவணி அதிகளவில் செலவாகிறது. இதை கருத்தில் கொண்டே பொருளாதாரம் 7.8% வளர்ந்தாலும், வெளிநாட்டு செலவுகளை கட்டுப்படுத்துவது குறித்து பேசப்படுகிறது. பிரதமர் மோடியும் கூட தங்கம் வாங்க வேண்டாம் என்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+