ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து படைக்கப்பட்ட வரலாறு.. முக்கிய மிஷன்களை வெற்றியாக மாற்றிய லக்கி இடம்!
சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று 100வது ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டிருக்கிறது. இந்த ஏவுதளத்திலிருந்து இதற்கு முன்னர் பல முக்கிய ராக்கெட்கள் வெற்றிகரமாக ஏவப்பட்டிருக்கின்றன. இதில் சில தோல்விகளும் உள்ளன.
தற்போது ஏவப்பட்டிருக்கும் ராக்கெட் இஸ்ரோவின் 100வது ராக்கெட் கிடையாது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்ட 100வது ராக்கெட்டாகும். ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து முதல் முதலாக கடந்த 1979ம் ஆண்டு ஆக.10ம் தேதி முதல் ராக்கெட் ஏவப்பட்டது. SLV-3 E10 என்பதுதான் இதன் பெயர். இதில் ரோகினி டெக்னாலஜி பேலோட் வைத்து அனுப்பப்பட்டது. இந்தியாவின் முதல் விண்வெளி ராக்கெட் 'SLV-3'-ன் செயல்திறனை கண்காணிக்க அனுப்பப்பட்டது. ஆனால் முதல் முயற்சி பாதிதான் வெற்றியடைந்தது.

அதன் பிறகு இஸ்ரோவின் தலைவராக முன்னாள் குடியரசு தலைவரான ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பொறுப்பேற்றார். அவர் தலைமையில் 1980 ஜூலை மாதம் 19ம் தேதி SLV-3E2 ராக்கெட் ஏவப்பட்டது. அந்த முயற்சி முழு வெற்றியை கொடுத்தது. அதன் பிறகு 2 SLV ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. பின்னர் 4 ASLV ராக்கெட்டுகள், 62 PSLV வகை ராக்கெட்டுகள், 16 GSLV வகை ராக்கெட்டுகள், 7 LMV3 ராக்கெட்டுகள், 3 SSLV ராக்கெட்டுகள், 1 RLV வகை ராக்கெட் இதுவரை ஏவப்பட்டிருக்கிறது.
இவற்றில் , 2008ல் ஏவப்பட்ட சந்திரயான் -1 (PSLV-C11), 2019ல் ஏவப்பட்ட சந்திரயான் -2 (GSLV-Mk III - M1), 2023ல் ஏவப்பட்ட சந்திரயான்-3 (LVM3 M4/) ஆகியவை மிக முக்கியமான மிஷன்களாக இருக்கிறது.
சந்திரயான் மிஷன்களை தவிர, 2013ல் ஏவப்பட்ட செவ்வாய் ஆர்பிட் மிஷன் (PSLV-C25), சூரியனை ஆய்வு செய்ய 2023ல் அனுப்பப்பட்ட ஆதித்யா-எல்1 மிஷன் (PSLV-C57) ஆகியவை ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்துதான் ஏவப்பட்டிருக்கிறது. வெளி கிரகத்தை ஆய்வு செய்யவும், சூரியனை ஆய்வு செய்யவும் அனுப்பப்பட்ட முதல் ராக்கெட்டுகள் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்துதான் சென்றிருக்கின்றன.
மட்டுமல்லாது கடந்த 2017ம் ஆண்டு இங்கிருந்து இஸ்ரோ, 104 செயற்கைக்கோள்களை Cartosat-2 series மிஷனில் PSLV-C37 ராக்கெட்டில் அனுப்பியது. இதன் மூலம் 2021வரை, ஒரே ராக்கெட்டில் அதிக செயற்கைக்கோள்களை அனுப்பியது இந்தியாதான் என்கிற பெருமையை தக்கவைத்திருந்தது. 2021க்கு பின்னர் எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் மூலம் 143 ராக்கெட்களை அனுப்பி இந்த சாதனையை முறியடித்தார்.

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றி மட்டும்தானா? என்றால் கிடையாது. தோல்வியும் நிறைய இருக்கிறது.
1. 2006ல் GSLV-F02 ராக்கெட்டில் ஏவப்பட்ட இன்சாட் -4சி ராக்கெட் ஏவுதல் தோல்வி
2. 2010ல் GSLV-D3, GSAT-4, GSLV-F06, GSAT-5P ஆகிய ராக்கெட் ஏவுதல்கள் தொடர்ந்து தோல்வி
3. 2021ல் கூட புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை GSLV-F10 ராக்கெட்டில் வைத்து அனுப்பியபோது தோல்வி
தோல்விகள் சில இருந்தாலும் வெற்றிகளைதான் ஸ்ரீஹரிகோட்டா அதிகம் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் இன்றும் இந்த வெற்றி தொடர்கிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications