போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஶ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்
சென்னை: போதை பொருட்கள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஶ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவர்கள் தினசரி விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பதுடன் நீதிமன்றம் மேலும் சில நிபந்தனைகளை விதித்துள்ளது.
தமிழ்நாட்டில் போதை பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவதாக அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களிடம் கஞ்சா, போதை ஊசி உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்பாடுகள் அதிகரித்து வருகின்றன. மேலும் உயர் ரக போதை பொருட்களின் புழக்கமும் அதிகமாக உள்ளதாக புகார் எழுந்து வருகிறது.

சென்னை நுங்கம்பாக்கம் மதுபான விடுதியில் நடைபெற்ற மோதல் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் போதை பொருள் மாஃபியாவாக செயல்பட்டது தெரியவந்தது. அவர் மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் இருந்தன. பிரசாத் எங்கிருந்து போதை பொருட்கள் வாங்குகிறார், அவர் அதை யாருக்கெல்லாம் விற்பனை செய்கிறார் என்று காவல்துறை விசாரணை நடத்தியது.
அப்போது சினிமாத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு பிரசாத் போதை பொருள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போதை பொருள் தடுப்பு காவல்துறையினர் கடந்த மாதம் 23 ஆம் தேதி நடிகர் ஶ்ரீகாந்தை கைது செய்தனர். தொடர்ந்து கடந்த மாதம் 26 ஆம் தேதி நடிகர் கிருஷ்ணா கைது செய்யப்பட்டார். பிரசாத்திடம் அவர்கள் கொகைன் போதை பொருள் வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது,
இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீதிமன்ற காவலில் இருந்த நடிகர்கள் ஶ்ரீகாந்த், கிருஷ்ணாவிடம் காவல்துறை கஸ்டடி எடுத்தும் விசாரணை நடத்தியது. இதனிடையே அவர்கள் இரண்டு பேரும் ஜாமீன் கேட்டு சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதற்கு காவல்துறை கடும் ஆட்சேபனை தெரிவிக்கவே, சிறப்பு நீதிமன்றம் அவர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து ஶ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர். இதுதொடர்பான வாதம் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் தெரிவித்திருந்தார். அதன்படி அந்த ஜாமீன் வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அப்போது நடிகர்கள் ஶ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகிய இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.10,000 மதிப்பிலான சொந்த ஜாமீன், அதே தொகை மதிப்பிலான இருநபர் ஜாமீன் உத்தரவாதம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மறு உத்தரவு பிறக்கப்படும் வரை இருவரும் தினசரி விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று கூறி நீதிபதி நிர்மல் குமார் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications