நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு இலங்கையிலிருந்து வந்த பாலியல் மிரட்டல்.. கைது செய்ய தீவிரம்
சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவர் இலங்கையில் உள்ளார் என சைபர் கிரைம் போலீஸார் கண்டுபிடித்துள்ளார்கள்.
இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி 800 என்ற படத்தில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இந்த படத்திலிருந்து விலக வேண்டும் என அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும், தமிழ் ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். எதிர்ப்புகள் அதிகரித்ததால் இந்த படத்திலிருந்து விலகுவதாக நடிகர் விஜய் சேதுபதி நேற்று முன்தினம் அறிவித்தார்.
இந்த நிலையில் நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு நெட்டிசன் ஒருவர் சமூக வலைதளங்களில் பாலியல் மிரட்டல் விடுத்துள்ளார். இதை கனிமொழி, பிரேமலதா, குஷ்பு உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தார்கள்.
இந்த நிலையில் சமூகவலைதளங்களில் அவதூறாக பேசியவர் மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் விஜய் சேதுபதிக்கு வந்த பாலியல் மிரட்டல் ட்வீட் இலங்கையிலிருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இலங்கையிலிருந்து ட்வீட் செய்த நபரை கைது செய்ய இன்டர்போல் உதவியை நாடியுள்ளது சைபர் கிரைம் போலீஸ்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications