ஸ்ரீபெரும்பதூர் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024 LIVE: துவம்சம் செய்த திமுக.. டிஆர் பாலு அமோக வெற்றி
சென்னை: ஸ்ரீபெரும்பதூர் லோக்சபா தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக வேட்பாளருமான டிஆர் பாலு காலை 7,58,611 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் பிரேம் குமாரை விட 4,87,029 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 3 ஆம் இடத்தில் பாஜக கூட்டணி தமிழ் மாநில காங்கிரசின் விஎன் வேணுகோபால் பிடித்துள்ளார்.
தொழிற்சாலைகள் நிறைந்த ஸ்ரீபெரும்பதூர் தொகுதி திமுவின் கோட்டையாகவே பார்க்கப்படுகிறது. இந்த தொகுதியில் திமுக 8 முறை வென்றுள்ளது. கடந்த 2014 லோக்சபா தேர்தலில் திமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்தது அதிமுக. எனினும் கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் டி ஆர் பாலு இந்த தொகுதியில் வென்று அசத்தினார்.

ஸ்ரீபெரும்பதூர் தொகுதி: தற்போது சிட்டிங்க் எம்பியாக இருக்கும் டி ஆர் பாலுவிற்கு இந்த முறையும் வெற்றி கிடைக்குமா? அல்லது அதிர்ச்சி வைத்தியம் காத்திருக்கிறதா? என்பது சற்று நேரத்தில் தெரிந்த்து விடும்.
ஸ்ரீபெரும்பதூர் தொகுதியில் இந்த முறை நான்கு முனை போட்டி நிலவுகிறது. திமுக - அதிமுக இடையே இந்த தொகுதியில் நேரடி போட்டி நிலவுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் போட்டியிட்டு இருக்கிறது.
வேட்பாளர்கள் விவரம்: வேட்பாளர்கள் விவரங்களை பார்த்தால் டி.ஆர். பாலு (திமுக), பிரேம்குமார் (அதிமுக), விஎன் வேணுகோபால் (தமாக), ரவிச்சந்திரன் (நாம் தமிழர் கட்சி) என களத்தில் உள்ளனர். 4 முனை போட்டி நிலவினாலும் திமுக - அதிமுக இடை யே கடும் பூட்டி நிலவுகிறது.
இருந்தாலும் டி ஆர் பாலுவே இந்த தொகுதியில் நட்சத்திர வேட்பாளராக உள்ளார். இதனால் அவருக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. லோக்சபா தேர்தல் வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்பட்டது. இதிலும் திமுகவின் டிஆர் பாலு முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. காலை 10.30 மணி நிலவரப்படி திமுகவின் டிஆர் பாலு 59,260 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் பிரேம் குமாரை விட 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
லோக்சபா தேர்தல் 2024 முடிவுகள் LIVE:
திமுக டிஆர் பாலு - 59,260 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
அதிமுக பிரேம் குமார் - 23,607 வாக்குகள் பெற்றுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் வி என் வேணுகோபால் - 13,610 வாக்குகள் பெற்றுள்ளார்
நாம் தமிழர் கட்சி வி ரவிச்சந்திரன் - 12,308 வாக்குகள் பெற்றுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை முடிவில்:
திமுக டிஆர் பாலு - 7,58,611
அதிமுக பிரேம் குமார் - 2,71,582
தமிழ் மாநில காங்கிரஸ் வி என் வேணுகோபால் - 2,10,110
நாம் தமிழர் கட்சி வி ரவிச்சந்திரன் - 1,40,233
நோட்டா - 26,450 வாக்குகள் கிடைத்துள்ளன.
முந்தைய தேர்தல் முடிவுகள்:
ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதியில் 8 முறை திமுக வென்றுள்ளது. அந்த வகையில் ஸ்ரீபெரும்பதூர் திமுக கோட்டையாக பார்க்கப்படுகிறது. 1999, 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுகவை சேர்ந்த ஆ.கிருஷ்ணசாமி தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றார். 2009-ம் ஆண்டு திமுகவை சேர்ந்த டி.ஆர்.பாலு வெற்றி பெற்றார்.
2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவை சேர்ந்த கே.என்.ராமசந்திரன் வெற்றி பெற்றார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் திமுகவை சேர்ந்த டி.ஆர். பாலு வெற்றி பெற்றார்.
2004 லோக்சபா தேர்தல் முடிவுகள்:
கிருஷ்ணமூர்த்தி (திமுக) - 5,17,617
வேணுகோபால் (அதிமுக) - 2,82,271
2009 லோக்சபா தேர்தல் முடிவுகள்:
டிஆர் பாலு (திமுக) - 3,52,641
ஏகே மூர்த்தி (பாமக) - 3,27,605
அருண் சுப்ரமணியன் (தேமுதிக) - 84,530
2014 லோக்சபா தேர்தல் முடிவுகள்:
கே. என். ராமச்சந்திரன் (அதிமுக) - 5,45,820
ஜெகத்ரட்சகன் (திமுக) - 4,43,174
மாசிலாமணி (மதிமுக) - 1,87,094
2019 லோக்சபா தேர்தல் முடிவுகள்:
டிஆர் பாலு (திமுக) - 7,93,281
வைத்திலிங்கம் (பாமக) - 2,85,326
ஸ்ரீதர் (மக்கள் நீதி மய்யம்) - 1,35,525.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications