Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துணை முதல்வர் உதயநிதி.. காலம் தாழ்த்தாதீர்கள்! முதல்வர் முன்னால் போட்டுடைத்த எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டாமா? உங்களை பேராசிரியர் அன்பழகன் ஏற்றுக் கொண்டதைப் போல நாங்களும் அவரை ஏற்றுக்கொள்வோம்.. காலம் தாழ்த்தாதீர்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையிலேயே எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் கேட்டுக் கொண்டுள்ளார். இதனையடுத்து உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டுமென்ற பேச்சு திமுகவினரிடையே மீண்டும் எழுந்துள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா செப்டம்பர் 17ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. இதே போல தந்தை பெரியாரின் பிறந்த நாள், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாள் விழா ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக திமுக கொண்டாடுகிறது.

mk stalin udhayanidhi stalin dmk

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த விழாவில் திமுக சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, பாவேந்தர் விருது உள்ளிட்ட விருதுகளும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து மேலும் இந்த விழாவில், பாப்பம்மாள் சார்பாக அவரது பேத்தி ஜெயசுதா பெரியார் விருதினையும்,
அறந்தாங்கி மிசா இராமநாதனுக்கு அண்ணா விருதினையும், ஜெகத்ரட்சகன் எம்பிக்கு கலைஞர் விருதையும், கவிஞர் தமிழ்தாசனுக்கு பாவேந்தர் விருதையும், வி.பி.ராஜனுக்கு பேராசிரியர் விருதையும் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் திமுக முன்னாள் எம்பி தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு மு.க.ஸ்டாலின் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் விருது வென்ற எஸ்.எஸ். பழனி மாணிக்கம் நிகழ்ச்சியில் ஏற்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், "திமுக வின் வெள்ளி விழா, பொன்விழா ஆண்டை கலைஞர் கொண்டாடினார். பவள விழா ஆண்டை முதலமைச்சராகிய நீங்கள் கொண்டாடுகிறீர்கள்.

இந்தியாவில் உள்ள எல்லா அரசாங்கமும் திராவிட மாடல் அரசை பின்பற்றுகின்றன. உங்கள் பெயரால் எனக்கு விருது வழங்கியது என் வாழ்நாளில் நான் செய்த பாக்கியம். அனைவருக்கு ஒரு கோரிக்கை உண்டு. இந்த மேடை தான் அதனை கேட்பதற்கு சரியான இடம் என்று நான் நினைக்கிறேன். உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டாமா? உங்களை பேராசிரியர் அன்பழகன் ஏற்றுக் கொண்டதைப் போல நாங்களும் உதயநிதி ஸ்டாலனை ஏற்றுக் கொள்வோம். காலம் தாழ்த்தாதீர்கள்" என பேசினார். அப்போது திமுக தொண்டர்கள் கைதட்டி உற்சாகமாக ஆரவாரம் செய்தனர்.

உதயநிதி ஸ்டாலின்: திமுக இளைஞர் அணி செயலாளராக நியமனம் செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின், 2021 சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் அமைச்சராக பதவியேற்பார் என கூறப்பட்ட நிலையில் அவரது ஆதரவாளர்கள் அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டனர். அதன் பிறகு உதயநிதி ஸ்டாலினுக்கு எப்போது அமைச்சர் பதவி வழங்கப்படும் என்பதே பேசுபொருளாக இருந்தது.

ஒரு வழியாக தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராகவும் உதயநிதி நில மாதங்களுக்கு பிறகு நியமனம் செய்யப்பட்டார். இதற்கிடையே இந்த மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா சென்ற நிலையில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக பதவி உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியானது.

தொடர்ந்து பல வாரங்களாகவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக எப்போது பதவி ஏற்பார் என்ற விவாதங்கள் எழுந்தது. இது தொடர்பாக திமுக அமைச்சர்களும் பல்வேறு கருத்துக்களை கூறி வந்தனர். இதற்கு நேரடியாகவே பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், எதுவாக இருந்தாலும் முதலமைச்சர் தான் முடிவு எடுப்பார் எனக் கூறியிருந்தார். இதற்கிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க சென்று வந்துவிட்ட நிலையில், இன்னும் அறிவிப்பு வெளியாகாமல் இருக்கிறது. இந்நிலையில் திமுக பொதுக் கூட்டத்தில் முதல்வர் முன்பே கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், திமுகவினரிடையே இது பேசுபொருளாக மாறி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+