திமுகவில் இணைந்த லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். மகன் ... பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்ட ஸ்டாலின்..!
சென்னை: லட்சிய நடிகர் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் மகன் ராஜேந்திரகுமார் திமுகவில் இணைந்தார்.
சென்னையை நோக்கி நிவர் புயல் வந்துகொண்டிருக்கும் வேளையில் திமுகவை நோக்கி கடந்த ஒரு வாரமாக பலரும் வரத் தொடங்கியுள்ளனர். நேற்று பாமகவை சேர்ந்த ஒரு சிலர் திமுகவில் இணைந்த நிலையில் இன்று ராஜேந்திர குமார் இணைந்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர்.காலத்தில் அதிமுகவில் மிக ஆக்டிவாக செயல்பட்டவர் ராஜேந்திரகுமார். அதிமுக மாணவரணி செயலாளராக இருந்த ராஜேந்திரகுமார் ஒரு முறை அக்கட்சி சார்பில் எம்.பி.யாகவும் இருந்திருக்கிறார். இவரது தந்தை எஸ்.எஸ்.ராஜேந்திரன் திமுகவின் ஆரம்ப கால பிரச்சார பீரங்கியாக இருந்திருக்கிறார்.
தனது திரைப்படங்களில் இடம்பெறும் வசனங்கள் மூலம் திமுகவை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தவர் எஸ்.எஸ்.ஆர். திமுக சார்பில் ஒரு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த அவர் ஒரு கட்டத்தில் கருணாநிதியுடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக அதிமுகவில் இணைந்தார்.

இந்நிலையில் எஸ்.எஸ்.ஆர். மகன் ராஜேந்திரகுமார் தன்னை ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டார். அப்போது அவருடன் அவரது மகனும் திமுகவில் உறுப்பினராக சேர்ந்தார். இவர் தொலைக்காட்சி சீரியல் ஒன்றில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இதனிடையே எஸ்.எஸ்.ஆர். திமுகவின் தொடக்ககாலத்தில் செயல்பட்டது குறித்த நினைவுகளை அவர்களுடன் ஸ்டாலின் பகிர்ந்துகொண்டார். இந்த நிகழ்வின் போது துரைமுருகன், ஆ.ராசா, பொன்முடி, மா.சுப்பிரமணியம் ஆகியோர் உடனிருந்தனர்.
-
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications