சப் இன்ஸ்பெக்டர் வேலைதான் கனவா? வந்தாச்சு அறிவிப்பு.. 1.12 லட்சம் வரை சம்பளம்.. எஸ்எஸ்சி வெளியிட்ட அறிவிப்பு
சென்னை: டெல்லி காவல்துறை உள்பட மத்திய அரசு காவல் பணிகளில் காலியாக உள்ள சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. எஸ்.எஸ்.சி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
சென்னை: மத்திய அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் எனப்படும் எஸ்எஸ்சி நிரப்பி வருகிறது. டெல்லி காவல்துறை உள்பட மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் காவல் பணிகளுக்கும் எஸ்எஸ்சி வாயிலாகவே பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. சம்பளத்தை பொறுத்தவரை ரூ.35 ஆயிரம் முதல் 1.12 லட்சம் வரை வழங்கப்படும்.

மத்திய அரசு பணி கனவுடன் காத்திருக்கும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் எஸ்எஸ்சி வெளியிடும் அறிவிப்பை ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருப்பார்கள். இந்த நிலையில், டெல்லி காவல்துறை உள்பட மத்திய அரசு காவல் பணிகளில் காலியாக உள்ள சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
டெல்லி காவல்துறையில் துணை ஆய்வாளர் பணி
திறந்தநிலை - 114
முன்னாள் படைவீரர்கள் (மற்றவர்கள்) - 08
முன்னாள் படைவீரர்கள் (சிறப்புப் பிரிவு) - 06
துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 10% இட ஒதுக்கீடு - 14
டெல்லி காவல்துறையில் துணை ஆய்வாளர் (முன்னாள்) பணி - பெண்
திறந்தநிலை - 70
CAPFகளில் துணை ஆய்வாளர் (GD)
CRPF (ஆண்) - 1006
CRPF (பெண்) - 23
BSF (ஆண்) - 212
BSF (பெண்) - 11
ITBP (ஆண்) - 198
ITBP (பெண்) - 35
CISF (ஆண்) - 1164
CISF (பெண்) - 130
SSB (ஆண்) - 71
SSB (பெண்) - 11
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். 01.08.2025 தேதிப்படி 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது, 02.08.2000-த்தில் இருந்து 01.08.2005-க்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு.
சம்பளம் எவ்வளவு?
சம்பளத்தை பொறுத்தவரை 7-வது ஊதிய கமிஷன் லெவல் 6 படி, ரூ.35,400 - 1,12,400 சம்பளம் வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை கணினி வழியிலான ஆன்லைன் டெஸ்ட், உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை அடிபடையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையங்களை பொறுத்தவரை நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, வேலூர், தூத்துக்குடி, கரூர், புதுச்சேரி ஆகிய நகரங்களில் நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம்
பொதுப்பிரிவினருக்கு ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை. ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்து கொண்ட பின்னர் (https://ssc.gov.in/) என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆர்வம் உள்ள விண்ணப்பதார்கள் 16.10.2025க்குள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_adv_capf_2025.pdf
-
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications